25 சிஆர்பிஎப் வீரர்கள் பலி, பிரதமர் மோடி இரங்கல்!!
சத்தீஷ்காரில் நக்சல் தீவிரவாதிகள் அதிக்கம் நிறைந்த சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை வெடித்தது.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் அதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதையறிந்து கொண்ட மாவோயிஸ்டு இயக்கத்தினர் ரகசியமாக அவ்விடத்தை முற்றுகையிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ராமன்சிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
மேலும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.