போபால்: மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) ஆட்சி செய்து வரும் சிவ்ராஜ் சவுகான் (Shivraj Chauhan) தலைமையிலான அரசாங்கத்தில் இன்று 28 அமைச்சர்கள் (Madhya Pradesh oath taking ceremony) பதவியேற்றனர். பதவிப்பிரமாணம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்களுக்கு சத்தியப்பிரமாணத்தை மத்திய பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் முதல் மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் நிலுவையில் இருந்தது. 28 அமைச்சர்கள் வரை விரிவாக்கம் செய்யக்கூடிய அரசாங்கம், ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து ஐந்து அமைச்சர்களுடன் செயல்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் முதல்வராக சிவ்ராஜ் சவுகான் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு 5 அமைச்சர்கள் பதவியேற்றனர்.


READ | மத்திய பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தலையிட மாட்டோம்’ சட்டத்தை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம்


READ | பாஜக-வின் MLA வேட்டையால், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு பலத்த அடி


மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக உத்தர பிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேல் (Anandiben Patel), மத்திய பிரதேச மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.


இவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 28 அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.