மத்திய பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தலையிட மாட்டோம்’ சட்டத்தை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம்

அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட நீதிமன்றமாக, நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2020, 04:45 PM IST
மத்திய பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தலையிட மாட்டோம்’ சட்டத்தை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம் title=

புது டெல்லி: இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றம், மத்திய பிரதேச மாநிலத்தில் யார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சட்டமன்றத்தின் சட்டவிதிகளில் நீதிமன்றம் தலையிடாது என்று மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து பாரதீய ஜனதா தாக்கல் செய்த மனுவையும், அதை எதிர்த்த காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த போது உச்ச நீதிமன்றம் கூறியது.

"அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட நீதிமன்றமாக, நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.

22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த பின்னர், கமல்நாத் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. இதனால் மத்திய பிரதேச அரசு தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பாஜக தனது மனுவில் கூறியது. 

இதற்கிடையில், காங்கிரஸ் அரசாங்கம் தனது எம்.எல்.ஏக்கள் பெங்களூரில் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதுடன், மாநிலத்தில் "ஜனநாயகத்தைத் தகர்த்துவிட்டது" என்று பாஜக மீது குற்றம் சாட்டியது.

22 எம்.எல்.ஏ.க்களில் 6 பேரின் ராஜினாமாவை மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி ஏற்றுக் கொண்டார். முன்னர் மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அழைத்து வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைத்தார். 

இதனால் தான் மத்திய பிரதேச பாஜக உச்ச நீதிமன்றத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News