500 ஆண்டு கால போரட்டத்திற்கு பின், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக  வாய்த்துள்ள மிகச்சிறந்த முகூர்த்தம் சில வினாடிகள். அந்த நேரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்லை நாட்ட வேண்டும் என ஆன்மீக தலைவர்களும், பூசாரிகளும் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் அதற்கான முகூர்த்த நேரம் 32 வினாடிகள், அதாவது அதாவது 12:44:08 வினாடிகள் முதல் 12:44:40  வரை தான் சிறந்த முகூர்த்த நேரம். 


புதன்கிழமை அன்று, மதியம் நடைபெற உள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள, 135 துறவிகள் உட்பட, 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


கொரோனா பரவல் தொடர்பான் அச்சமும் சிறிது நிலவுகிறது.  சென்ற வாரம் விழாவுடன் தொடர்புடைய சுமர் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.  இதில் 16 போலீஸ்காரர்களும் ஒரு பூசாரியும் அடங்குவர்.


விழாவின் போது, கொரோனா பரவல் தொடர்பான நெறிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படும். 


ALSO READ | WATCH VIDEO: விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி, சரயு நதிக்கரையில் ஒளிரும் விளக்குகள்


நாடே இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை காண காத்துக்கொண்டிருக்கிறது. 


அயோத்தி வண்ணக் கோலம் பூண்டுள்ளது. எங்கும் ஒளிரும் விளக்குகளுடன் தீபாவளியை போல் காட்சி அளிக்கிறது. சரயு நதிக்கரை ஓரம்  விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருவிழா போல் காட்சி அளிக்கிறது. 


ஏற்கனவே விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்யாவில் எங்கு பார்த்தாலும் தீபத்தின் ஒளியை காணலாம். 


இதை அடுத்து, அயோத்தியாவில் உள்ள ஜெய்சிங்பூர் வித்யா குண்ட் என்னும் கிராமத்தில் உள்ள குயவர்கள், அகல விளக்குகளை தயாரித்துள்ளனர். 


சுமார் 1.25 லட்சம் அகல விளக்குகளுக்கான ஆர்டர் குவிந்தது. 


இதை அடுத்து, பூமி பூஜையை முன்னிட்டு தேவைப்படும் அகல் விளக்குகளை செய்வதற்கான பணி அக்கிராமத்தில் உள்ள 40 பேரிடம் ஒப்படைக்கப்பட்டு தயாராகியது.


ALSO READ | அமெரிக்காவில் அயோத்யா: ஆகஸ்டு 5-க்கு தயாராகிறது டைம்ஸ் சதுக்கம்!!


கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குயவர்களுக்கு இந்த வேலை கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.