3D Video: யோகா ஆசானாக பிரதமர் நரேந்திர மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யோக ஆசனம் செய்து போன்று சித்தரிக்கப்பட்டுள்ள 3D அனிமேஷன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யோக ஆசனம் செய்து போன்று சித்தரிக்கப்பட்டுள்ள 3D அனிமேஷன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உறையாற்றி வருகிறார். இந்த வகையில் இன்று 42-வது ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியினில் உறையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய போது அவர் "நான் யோக ஆசிரியர் இல்லை, ஆனால் சிலர் என்னை அப்படி தான் பாவிக்கின்றனர் போலும். என்னை யோகா ஆசானாக பாவித்து 3D வடிவில் யோகா வீடியோ ஒன்றினையும் சிலர் வடிவமைத்துள்ளனர். விரைவில் அந்த வீடியோவினை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இந்த 3D அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி யோகா கற்றுக்கொடுக்கும் வகையிலும், தானும் யோகா ஆசனத்தினை செய்வது போலவும சித்தரிக்கப்பட்டுள்ளது!