இந்த மருந்துகளுக்கு GST கிடையாது: நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44வது GST கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கபட்டது. மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு மற்றும் வரிச்சலுகை அளிப்பது தொடர்பாக, மாநில நிதி அமைச்சர்கள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்.,
ALSO READ | Income Tax புதிய வலைத்தளம் செயலிழந்தது: விரைவில் சரி செய்ய Infosys-க்கு உத்தரவு
ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர் மாஸ்க் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படும். கருப்பு பூஞ்சை (Black Fungus) நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு வரி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் டோசிலிசுமாப் மருந்துக்கும் வரி இருக்காது.
அதே போல சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 12% ஆக குறைக்கப் படுவதாகவும், கொரோனா சோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றின் வரியும் குறைக்கப் படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த வரிகுறைப்பு மற்றும் மாற்றம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR