புது டெல்லி: டெல்லியில் வீடு வீடாக ரேஷன் வழங்கப்படும். டெல்லி அமைச்சரவை (Delhi Cabinet) முதலமைச்சர் "கர் கர் ரேஷன்" திட்டத்தை (வீட்டுக்கு வீடு ரேஷன்) அனுமதித்துள்ளது. வீடு வீடாக ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்போது, ​​வீட்டிற்கு நேரடியாக ரேஷன் கொண்டு செல்லப்படும்.  அதாவது, டெல்லி மக்கள் இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் திட்டத்தின் "டோர்ஸ்டெப்" டெலிவரி (Doorstep delivery of ration) மூலம் டெல்லியில் வசிக்கும் சுமார் 72 லட்சம் மக்கள் ஒவ்வொரு மாதமும்  பயனடைவார்கள். இவர்கள் தற்போது ரேஷன் வாங்கிக்கொண்டு இருக்கும் பட்டியலை சேர்ந்தவர்கள். டெல்லி அரசாங்கத்தின் "முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு ரேஷன்" திட்டம் தொடங்கும் அதே நாளில், மத்திய அரசின் ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு திட்டம் (One Nation, One Ration Card) டெல்லியில் செயல்படுத்தப்படும்.


"முதலமைச்சரின் வீட்டுக்கு வீடு ரேஷன்" திட்டத்தில் கீழ், டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இரண்டு விருப்பம் வழங்கப்படும். ஒன்று நேரடியாக மானிய கடைக்கு சென்று தாங்களாகவே சாமான்களை வாங்கிக்கொள்வது அல்லது வீட்டுக்கு விநியோகம் செய்யப்படுவது. இந்த இரண்ட்டில், ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதில் வீட்டு விநியோகத்தில், கோதுமைக்கு பதிலாக, கோதுமை மாவு வழங்கப்படும். அடுத்த 6-7 மாதங்களில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ALSO READ | online-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாக விண்ணப்பிப்பது?


முதல்வர் கர் கர் ரேஷன் திட்டத்தை (Mukhya Mantri Ghar Ghar Ration Ration Yojna) அமைச்சரவை நிறைவேற்றியது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) நேற்று ட்வீட் செய்துள்ளார். இதை அமல்படுத்தும்போது, ​​மக்களின் ரேஷன் வீட்டிற்கு அனுப்பப்படும், அவர்கள் ரேஷன் கடைக்கு வர வேண்டியதில்லை. இது மிகவும் புரட்சிகர நடவடிக்கை. பல ஆண்டுகளாக "ஏழைகள் மரியாதையுடன்" ரேஷன் பெற வேண்டும் என்பது எங்கள் கனவு. இன்று அந்த கனவு நிறைவேறியது என்றார்.


இப்போது மக்கள் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டியதில்லை. ஏழை மக்களைப் பொறுத்தவரை ரேஷன், அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும். எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எஃப்.சி.ஐ (FCI) கிடங்கிலிருந்து கோதுமை எடுக்கப்படும். அது மாவு அரைக்கும் ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாவு தயாரிக்கப்படும். அதை பாக்கெட்டுகளில் அடைத்து,  ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்படும்.


செப்டம்பர் 10, 2018 அன்று, டெல்லி அரசு "வீட்டுக்கு விநியோகம்" (Doorstep delivery) திட்டத்தைத் தொடங்கியது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். இதைப் பயன்படுத்த, சாதாரண மக்கள் 1076 என்ற எண்ணை அழைக்க வேண்டும். இதற்குப் பிறகு, அரசாங்கத்தின் நிர்வாகி உங்கள் வீட்டிற்கு வருவார். நீங்கள் எந்தவிதமான அட்டையை தயாரிக்க வேண்டும் என்பதை அவர் முன்கூட்டியே உங்களுக்கு விளக்குவார்.


ALSO READ | குடும்ப அட்டை - ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு செப்டம்பர் வரை நீட்டிப்பு.