online-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாக விண்ணப்பிப்பது?

ஆன்-லைன்-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாகப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Last Updated : Jun 6, 2020, 09:50 AM IST
online-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாக விண்ணப்பிப்பது? title=

ஆன்-லைன்-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாகப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஆதார் மற்றும் PAN அட்டை போலவே, ரேஷன் கார்டும் நாட்டின் குடிமக்களுக்கான முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் மளிவு விலையில் கிடைக்கிறது. மறுபுறம், இது ஒரு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. 

குடும்ப அட்டை - ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு செப்டம்பர் வரை நீட்டிப்பு...

சமீபத்தில் 'One Nation One Rationcard (ஒரு தேசம் ஒரே குடும்ப அட்டை)' முறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ், எந்த மாநிலத்தின் குடும்ப அட்டை வைத்திருப்பவரும் தற்போது தாங்கள் இருக்கும் மாநிலத்தில் ரேஷன் பொருட்களை பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், ஆன்-லைன் வசதியில் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாகப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நீங்கள் இதுவரை ஒரு குடும்ப அட்டையை பெறவில்லை என்றால், இப்போது அதை ஆன்லைனில் பெறலாம் (Apply online for ration card). இதற்காக, அனைத்து மாநிலங்களாலும் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் மாநிலத்தின் பூர்வீக வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைகள் பொதுவாக இரண்டு வகைகளால் ஆனது.

ஒன்று PPL வகை மற்றொரு Non-PPL வகை. வருமானத்தின் படி, நீங்கள் இந்த குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முதலில் அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட வேண்டும். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை ஆதாரமாக கொடுக்கலாம். இந்த அட்டை இல்லை என்றால், அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு அட்டையான சுகாதார அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வழங்கலாம். 

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதோடு ஐந்து முதல் 45 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது புல சரிபார்ப்புக்கு அனுப்பப்படும். படிவத்தில் நிரப்பப்பட்ட தகவல்களை அதிகாரி ஆராய்ந்து அதை உறுதிப்படுத்துவர்.

அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி!

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த செயல்முறை முடிக்கப்படுகிறது. விசாரணை முடிவு நேர்மறையாக அமைந்தால் குடும்ப அட்டை 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இது தவிர, விண்ணப்பதாரர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பொது சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா முழு அடைப்பு காலத்தில் நாடு முழுவதும் சுமார் 80 கோடி ஏழைகளுக்கு அரசு இலவச குடும்ப அட்டைகளை வழங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு 5 கிலோ கூடுதல் ரேஷனை அரசாங்கம் இலவசமாக அளிக்கிறது. இந்த தர ரேஷன் தற்போதைய வரம்பை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News