7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!
மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் விரைவில் அதிரடி உயர்வு வரப்போகிறது! அரசாங்கம் மேலும் ஒரு கொடுப்பனவை அதிகரிக்கப் போகிறது
புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படியை உயர்த்திய மோடி அரசு, தற்போது மேலும் ஒரு அலவன்ஸை உயர்த்த ஆலோசித்து வருகிறது.
மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தலாம். தீபாவளியையொட்டி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3 சதவீதம் உயர்த்திய அரசு, இனி வீட்டு வாடகைப்படியையும் உயர்த்தலாம். அரசுப் பணியாளர்கள் ஜனவரி முதல் அதன் பலனைப் பெறலாம்.
குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிவு அனுப்பப்பட்டது
11.56 லட்சம் மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை (House Rent Allowance) உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அமல்படுத்துவது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த பரிந்துரை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ரயில்வே வாரியம் அங்கீகரித்தால் ஜனவரி 2021 முதல், ஊழியர்களுக்கு HRA அதிகரிக்கும். இது பணியாளர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்தும்.
ALSO READ: 7th Pay Commission அப்டேட்: 1.5 கோடி ஊழியர்களுக்கு அதிகரித்தது VDA: கணக்கீடு இதோ
ஜனவரி 1, 2021 முதல் ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் (IRTSA) மற்றும் ரயில்வே நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரெயில்வேமேன் (NFIR) ஆகிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் வசிக்கும் நகரத்தின் வகைக்கு ஏற்ப, அவர்களுக்கான HRA கிடைக்கும். 'X' பட்டியலில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு இனி 5400க்கு மேல் HRA கிடைக்கும். இதேபோல், 'Y' பிரிவு நகரத்தில் வசிக்கும் ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி 3600 ரூபாயாக உயரும் என்றால், 'Z' பிரிவில் வசிப்பவர்களின் HRA ரூ.1800 ஆக அதிகரிக்கும்.
ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் போது வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது வீட்டு வாடகைப்படியும், போக்குவரத்து கொடுப்பனவு (TA) அதிகரிக்கும். இந்த இரண்டு கொடுப்பனவுகளும் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கப்படுகின்றன. வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களின் TA, அகவிலைப்படி ஆகியவற்றை ஏற்கனவே உயர்த்தப்பட்டது, அவர்களுக்கு தீபாவளி போனஸும் வழங்கப்பட்டது.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களின் கிராஜுவிட்டியில் சூப்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR