7th Pay Commission அப்டேட்: 1.5 கோடி ஊழியர்களுக்கு அதிகரித்தது VDA: கணக்கீடு இதோ

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், இதனால் நாடு முழுவதும் மத்தியத் துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 01:35 PM IST
7th Pay Commission அப்டேட்: 1.5 கோடி ஊழியர்களுக்கு அதிகரித்தது VDA: கணக்கீடு இதோ title=

புதுடெல்லி: மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு பொருந்தும் குறைந்தபட்ச ஊதியத்தை (மாறும் அகவிலைப்படி) தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் திருத்தியுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விலை உயர்வு மூலம் சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

வேரியபிள் டியர்னஸ் அலவன்ஸ் எனப்படும் VDA ஆனது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) தொழிலாளர் பணியகத்தால் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைக்கப்பட்ட அலுவலகம்) தொகுக்கப்பட்ட விலைக் குறியீட்டின் அடிப்படையில் திருத்தப்பட்டது.

2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கான சராசரி CPI-IW ஆனது சமீபத்திய மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) திருத்தத்தை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

"நாடு கோவிட்-19 (Covid-19) தொற்றுநோயின் தாக்கத்தால் போராடி வரும் நேரத்தில், மத்தியத் துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகை தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விகிதத்தை திருத்தியுள்ளது. மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) 1.10.2021 முதல் அமுலுக்கு வரும்” என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களின் கிராஜுவிட்டியில் சூப்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

வெவ்வேறு வகை ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களின் அட்டவணை இதோ:

 

Schedule employment Category of employees Rate of wages including Variable Dearness Allowance Area wise per day (in Rupees)
A B C
Construction or maintenance of roads or runways or building operations etc. Unskilled 654 546 437
Semi-Skilled/Unskilled Supervisor 724 617 512
Skilled/Clerical 795 724 617
Highly Skilled 864 795 724
Sweeping and Cleaning -- 654 546 437
Loading and Unloading workers -- 654 546 437
Watch and Ward Without Arms 795 724 617
With Arms 864 795 724
Agriculture Unskilled 417 380 377
  Semi-Skilled/Unskilled Supervisor 455 419 384
  Skilled/Clerical 495 455 418
  Highly Skilled 547 509 455
 

சுரங்க ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களின் அட்டவணை இதோ:

Category Above Ground Below Ground
Unskilled 437 546
Semi-Skilled/Unskilled Supervisor 546 654
Skilled/Clerical 654 762
Highly Skilled 762 851
 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், இதனால் நாடு முழுவதும் மத்தியத் துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறினார். கட்டுமானம், சாலைகள், ரன்வேக்கள், கட்டட பணிகள், துப்புறவு மற்றும் அன்லோடிங், சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல், கண்காணிப்பு, சுரங்கங்கள் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ள பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

பிரதமரின் (PM Modi) “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்” என்ற நோக்கின் ஒரு பகுதியாக இது உள்ளது என்றும் இது அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ALSO READ: மத்திய ஊழியர்களுக்கு சம்பளத்தில் Double Bonanza! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News