7th Pay Commission: DA Hike, ஊதிய உயர்வு பற்றிய முக்கிய விவரங்கள்!!
மாநில மற்றும் மத்திய அரசு மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், இராணுவப் படைகளின் சில உறுப்பினர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
7th Pay Commission Latest News: மாநில மற்றும் மத்திய அரசு மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், இராணுவப் படைகளின் சில உறுப்பினர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இன்னும் பல செய்திகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன. அரசு ஊழியர்களுக்கான சிபிசி ஊதிய உயர்வு மற்றும் அது தொடர்பான முக்கிய செய்திகளின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு வரமாய் வரவுள்ளது
கொரோனா (Corona) காரணமாக, சென்ற ஆண்டு அகவிலைப்படி (Dearness Allowance) நிறுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலேயே, அதையும் சேர்த்து இந்த ஆண்டுக்கான அகவிலைப்படியுடன் அரசு கொடுக்கும் என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது.
7th CPC ஊதியம் எப்போதிருந்து கிடைக்கும்
பல மாநிலங்களில், அந்தந்த மாநில அரசு ஊழியர்களுக்கு, 2021 ஜனவரி முதலே உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஊழியர்கள் 2020 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான சுமார் 300 கோடி ரூபாய் செலவை மாநிலக் கருவூலம் ஏற்கும்.
Also Read | AIADMK முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி கோயம்புத்தூரில் தேர்தல் பிரசாரம்
7th Pay Commission அகவிலைப்படி உயர்வு?
2021 ஜனவரியில் எதிர்பார்க்கப்படும் 7 வது ஊதியக்குழு இணைக்கப்பட்ட அகவிலைப்படியில் (DA) மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அதிகரிப்பு கிடைக்கும் என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 7 வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின் படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission கொடுப்பனவு
ஊழியர்கள் பணியில் இருக்கும்போது ஊனமுற்று, பின்னரும் பணியில் தொடர்ந்தால், அவர்கள் அனைவருக்கும் "ஊனமுற்றோர் இழப்பீடு" வழங்க 2020 டிசம்பர் இறுதி வாரத்தில், மோடி அரசு (Modi Government) முடிவு செய்தது.
2020 இல் 7 வது ஊதியக்குழுவின் DA Hike
முன்னதாக 2020 மார்ச்சில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு DA-வின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை வழங்க ஒப்புதல் அளித்தது. இவை ஏழாவது ஊதியக்குழுவுடன் இணைக்கப்பட்டு 01.01.2020 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. விலை உயர்வை ஈடுசெய்ய, அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் (Pension), தற்போதுள்ள 17 சதவீத விகிதத்தை விட 4 சதவீதம் அதிகரித்து இது வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது.
Also Read | ஒரே second-ல் பணம் காலி ஆகிவிடும்: Whatsapp Pay செய்யும் போது ரொம்ப கவனமா இருங்க!!
DA Hike தாக்கம்
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (DA மற்றும் DR) ஆகிய இரண்டின் காரணமாக கருவூலத்தின் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ .12,510.04 கோடியாக இருக்கும் என்றும் 2020-21 நிதியாண்டில் ரூ .14,595.04 கோடியாக இருக்கும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. (ஜனவரி, 2020 முதல் பிப்ரவரி, 2021 வரை 14 மாத காலத்திற்கு). இந்த முடிவு சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR