தமிழகதின் இன்னாள் முதலமைச்சரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல்வர் பழனிச்சாமி சேலம் எடப்பாடியில் தொடங்கி பல மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். இன்று கோவையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. பிரசாரத்தின் புகைப்படங்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.
கோயம்புத்தூர் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, கோவை ராஜவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேள தாளத்துடன் வரவேற்பு
கோவிலில் தரிசனம் செய்த பிறகு சாலைப் பேரணியாக வாகனத்தில் பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் வேட்பாளர்
பேரணியில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன
நாட்டின் பிரதமர் மற்றும் தனது சகாவுடன் முதலமைச்சர் பழனிசாமி
துணை முதல்வருடன் முதல்வர் இணக்கமாக...
இந்த முறை அலங்கரிக்கும் இதே நாற்காலியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ளும் பேரணியை கோவையில் நடத்தினார் முதலமைச்சர் பழனிசாமி