Tractor பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயி கொலை, போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமா?
டெல்லியில் நடைபெறும் Tractor பேரணியில் பங்கு கொண்ட விவசாயிகளில் ஒருவர் மரணம்... போலீசாரின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்..
புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் Tractor பேரணியில் பங்கு கொண்ட விவசாயிகளில் ஒருவர் மரணம்... போலீசாரின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.. ஆனால் டிராக்டர் கவிழ்ந்ததால் விவசாயி இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி (Tractor Rally) டெல்லியில் நடைபெற்று வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். முன்னதாக குடியரசு தின விழா பேரணி முடிந்த பிறகே, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த விவசாயியின் உடலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் நுழைந்த விவசாயிகள், சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்தனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை (Farmers) கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் விவசாயிகள் போராட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது.
Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்
செங்கோட்டை இருக்கும் பகுதிக்கும் சென்று கோட்டை (Red Fort) கொத்தளத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அங்கு கொடியை ஏற்றி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ர முழக்கங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தினர். கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிலையில், விவசாயி ஒருவர், துப்பாக்கிச் சூட்டினால் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரி ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார்.
”விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த முன்பே அங்கீகரிக்கப்பட்ட பாதையில் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம், ஆனால் அவர்களில் சிலர் காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்து அத்துமீறினார்கள். காவல்துறையினரைத் தாக்கினர். அமைதியை நிலைநாட்ட உதவுமாறு விவசாய சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். குடியரசு தினத்தன்று இது அமைதியான எதிர்ப்பு போராட்டம் அல்ல” என்று டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Also Read | குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை (Farm Laws) ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். சுமார் 2 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR