அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து மரியாதை செய்யாமல் இருப்பது, சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி தமிழைப் புறக்கணிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் அண்மைக் காலமாக  சர்ச்சையாக உருவெடுப்பது வழக்கமாகவே மாறிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை வெடித்துள்ளது. இம்முறை பஞ்சாயத்து கிளம்பியுள்ளது புதுச்சேரியில். அங்கேயுள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சர்வதேச பொது சுகாதார பள்ளித் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளியைத் திறந்து வைத்தார். 



இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே விழா தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தில் பாடல் இசைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் முதலமைச்சர் ரங்கசாமியும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததன் காரணத்தை கேட்ட நிலையில் உரிய பதில் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.  இதையடுத்து அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி பாதியிலேயே வெளியேறியதாகக் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை - மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை


 


பின்னர் சிறிது நேரம் கழித்து விழாவின் இடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர்,  ஆளுநர்,  முதலமைச்சர் கலந்துகொண்ட ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு மாறாக சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | தமிழ் புறக்கணிப்பு; சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது: மு.க.ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR