மதுரா நகரில் அமைந்துள்ள பகவான் கிருஷ்ணா கோயில் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மசூதியை அகற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உத்தரபிரதேச மாநிலம் மதுரா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் இந்து ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட பின்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இத்கா மசூதியை அகற்றக் கோரி ,பக்தர்கள் குழு கடந்த மாதம் சிவில் நீதிமன்றத்தை நாடியது.


மதுரா நகரத்தின் கேசவ் தேவ் கோவிலில் உள்ள பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த வழக்கில் ஒரு வாதியாவார். ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் மற்ற 6 பக்தர்கள்  சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். வக்கீல்கள் ஹரிசங்கர் ஜெயின், விஷ்ணு ஜெயின் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இருப்பினும், அக்டோபர் 2 ம் தேதி, மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை கூடுதல் மாவட்ட நீதிபதி சாயா சர்மா பிறப்பித்ட்தார். வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 இன் கீழ் வழக்கை ஒப்புக்கொள்வதற்கான தடையை மேற்கோள் காட்டி நீதிமன்றம் மனுவை ஏற்க மறுத்துவிட்டது.


ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!


அந்த மனுவில், 1658 ஜூலை 31 முதல் கி.பி 1707 மார்ச் 3 வரை இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் அவுரங்கசீப், “ஏராளமான இந்து மத இடங்களையும் கோயில்களையும் இடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.” என கூறப்பட்டிருந்தது


“இது கி.பி 1669-70 ஆண்டில் மதுராவின்  கேசவ் தேவ் என்ற  ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் நிற்கும் கோயில் உட்பட பல கோவில்கள் இடிக்கப்பட்டன. கேசவ் தேவ் கோயிலை இடிப்பதில் ஓரலவு வெற்றி பெற்ற அவுரங்கசீப்பின் இராணுவம், தனது அதிகாரத்தின் வலிமையை கொண்டு கட்டுமானத்தை எழுப்பி அதற்கு இத்கா மசூதி என்று பெயரிடப்பட்டது, ”என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடக் கூடாது..!!!


பி.வி. நரசிம்மராவ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது அயோத்தி ராமர் கோயில் அமைப்பதற்கான  போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில், 1991 செப்டம்பரில் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991, இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது, நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள ராம் ஜன்மபூமி-பாபர் மசூதி சர்ச்சை தவிர, ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த ஒரு வழிபாட்டுத் தலங்கள், தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்படும் என கூறப்பட்டது.


இருப்பினும், உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டம்,  அரசியலமைப்பு செல்லுபடியாகாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டனர், ஏனெனில், இதில் அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான, நீதித்துறை மறுஆய்வு பெறுவதற்கான உரிமையை இந்த சட்டம் தடைசெய்கிறது என அவர் வாதிட்டனர்.


மதுரா மனுவில் 1991 சட்டத்தின் விதிகள் “இந்த வழக்கில் பொருந்தாது”  என கூறப்பட்டுள்ளது.


ALSO READ | கோயில் கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!