ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி உடன் முடிவடைவதாக மத்திய அரசு ஏற்க்கனவே கூறி இருந்தது.


இந்நிலையில் ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.