காஷ்மீர் பண்டிட்களின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென டெல்லி சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், எதற்காக வரி விலக்கு கேட்கிறீர்கள்? படத்தை யூ டியூபில் வெளியிட்டால் அனைவரும் இலவசமாகப் பார்க்கமுடியும் எனக் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தினர். 


மேலும் படிக்க | LG vs AAP: டெல்லியில் அதிகாரம் யாருக்கு SC-யால் மாறுபட்ட தீர்ப்பு!



அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடிக்க முடியாததால் பாஜக இது போன்ற செயல்களின் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறை உதவியுடன் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல பாஜக விரும்புவதாகவும் டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடுக்க டெல்லி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்குள் நுழையும்போது டெல்லி காவல்துறையினர் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், எனவே இதனை விசாரிக்க சுதந்திரமான, நியாயமான குற்றவியல் விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடருமென பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.


மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G