டெல்லியில் துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!
டில்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் துணைநிலை கவர்னருக்கு இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பது குறித்து தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசு சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக 2018 ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த தீர்ப்பில், டெல்லியில் நிலம், போலீஸ் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய முடியாது எனக் கூறி நீதிபதி சிக்ரி, துணைநிலை ஆளுனருக்கே அதிகாரம் உள்ளது என்றார். நீதிபதி பூஷண், டெல்லி அரசுக்கே அதிகாரம் என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இதனால் டெல்லி அரசு - துணைநிலை கவர்னர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது.
Supreme Court refers the issue to a larger bench to decide whether the Delhi government or Lieutenant Governor should have jurisdiction over ‘Services’ in Delhi. pic.twitter.com/SwgYzT6c5N
— ANI (@ANI) February 14, 2019
இதையடுத்து, டெல்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை கவர்னர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரடைந்து வருகிறது. கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் யூனியன் பிரதேச அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3 வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.