‘பான் கார்டு’டன் ‘ஆதார் எண்’ணை கட்டாயம் இணைக்க வேண்டும் : மத்திய அரசு
ஜுலை 1-ம் தேதி முதல் தங்களது ‘பான் கார்டு’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.
‘பான் கார்டு’டன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பயனைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, பான் கார்டு எனப்படம் நிரந்தர கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. எனவே 1-ம் தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும்.