Agneepath: அக்னிபாத் ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 23: மத்திய அரசு
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் கலவரம் வெடித்த நிலையில், இந்த ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பை 23 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது
புதுடெல்லி: ராணுவத்திற்கு தற்காலிகமாக ஆள்சேர்க்கும்அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுமே அதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. வட மாநிலங்களில் கலவரம் வெடித்தது.
'அக்னிபாத்' என்ற ஆட்சேர்ப்பு திட்டத்தை கடந்த செவ்வாய்கிழமையன்று (2022, ஜூன் 14) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.
46 ஆயிரம் வீரர்களை தற்காலிகமாக ராணுவத்தில் சேர்க்கும் இந்தத் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் மூலம் 17.5 வயது முதல் 21 வயதான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்தார்.
இதில் அதிகபட்ச வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது. சர்ச்சைகளின் எதிரொலி வடமாநிலங்களில் கலவரங்களாகவும், எதிர்ப்பு போராட்டங்களாகவும் மாறியது.
மேலும் படிக்க | 'அக்னிபாத்' திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள் - மத்திய அரசுக்கு ப.சி. கண்டனம்.
இதனை அடுத்து, அக்னிபாத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பான 21 என்பதில் இருந்து 23 வயது என அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஆனால், இந்த வயது வரம்பு நீட்டிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பணியில் சேருபவர்களுக்கு முதலாண்டு சம்பளமாக 4.76 லட்சம் ரூபாயும், கடைசி மற்றும் 4-ம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பணியில் சேருபவர்களில் 25 சதத்தினர், அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதம் உள்ள 75% வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தால் தங்களது வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதால் இதனை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வட மாநில இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
குறிப்பாக, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR