அக்ஸ்டா வெஸ்ட்லாண்ட் விசாரணையில் திருமதி காந்தி என கூறிய மைக்கேல்...
அகஸ்டா வெஸ்ட்லேண்டு ஊழல் விசாரணையின் பொது `திருமதி காந்தி` என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது!
அகஸ்டா வெஸ்ட்லேண்டு ஊழல் விசாரணையின் பொது "திருமதி காந்தி" என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோருக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல். அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சுமார் 225 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக மைக்கேல் மீது CBI, அமலாக்கத்துறை போன்றவை குற்றம் சாட்டியுள்ளன. அந்தத் தொகை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில், இந்தியப் புலனாய்வு நிறுவனங்களால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர். கிறிஸ்டியன் மைக்கேலை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறை சார்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு மைக்கேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், விசாரணையின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பெயரை குறிப்பிட்டதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் கிறிஸ்டியன் காங்கிரஸ் "திருமதி காந்தி" பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த காரணத்திறகு சொன்னார் என்பதை தற்போது கூற முடியாது. இத்தாலிய பெண்ணின் மகன் என அவர் கூறியதுடன், அந்த பெண் இந்தியாவின் அடுத்த பிரதமர் எனவும் கூறினார். விசாரணையின் போது, HAL நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக டாடா நிறுவனம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கினார். விசாரணையின் போது மைக்கேல் துன்புறுத்தப்படுவதாக, அவரது வழக்கறிஞர் பொய் சொல்வதை தடுக்க வேண்டும் எனக்கூறினார்.