கேரளா: இன்று மாலை கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான துயர விபத்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிர்ச்சி மற்றும் வேதனையை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து அரசு வசதிகளையும் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைத்து அரசு அதிகரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 


மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உள்ளாட்சி அமைப்புகளின் அமைச்சர் ஏ சி மொய்தீனை முதல்வர் நியமித்துள்ளார். ஏ.சி. மொய்தீன் ஏற்கனவே திரிசூரிலிருந்து கரிபூருக்கு புறப்பட்டார்.


ALSO READ | Breaking news: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்திற்குள்ளானது


மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட போலீஸ்  ஐ.ஜி.யையும் முதல்வர் நியமித்துள்ளார். இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்களும் ஈடுபட்டுள்ளன.


 



பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.