தொடர்ச்சியாக விமானத்தில் பயனிப்பவரா? - உஷார்!
கடந்த இரண்டு மாதங்களில் விமானப் போக்குவரத்து டர்பைன் எரிபொருளின் (ATF) விலைகள் கனிசமாக அதிகரித்துள்ளதால், விமானப் பயணத்திற்கான பயனச்சீட்டுகளின் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, ATF விலைகள் 6% உயர்ந்துள்ளன. இந்த ATF எரிபொருள் தற்போது ரூ. 53,045 க்கு கிலோலிட்டர் விற்பனையாகிறது. இந்த விலையானது முன் விற்கப்பட்ட விலையினை விட ரூ. 3,025 அதிகமாகும்.
இத்தகைய சூழ்நிலைகளில், விமான செயல்பாட்டு செலவு அதிகரித்துள்ளதால் டிக்கெட் விலை அதிகரிப்பினை தவிர்க்க இயலவில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வானது, கடந்த 2 மாதங்களில் மூன்றாவது விலை உயர்வாகும். சாமானியர்களை இந்த விலை உயர்வு பாதிக்காது என்ற போதிலும், வழக்கமாக விமானத்தில் பயனிப்பவர்களுக்கு இந்த விலை உயர்வானது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!