Samajwadi Party Cycle Yatra: உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், விஷ்ணுவின் அருள் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மேலும் பாஜக அரசை தாக்கிய பேசிய அவர், 2024 தேர்தல் முக்கியமானது. அதில் இந்தியா கூட்டணி வெல்லும் எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக உ.பி. மாநிலத்தின் மீது அனைவரது பார்வையும் உள்ளது. ஏனெனில் இங்கு தான் அதிக எண்ணிகையிலான மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த வரிசையில் மாநில கட்சியான சமாஜ்வாதி கட்சியும் பிடிஏ யாத்ரா (PDA Yatra) மூலம் சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகள் என்று அழைக்கப்படும் மாவட்டங்களில் சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அலகாபாத்தில் இருந்து புறப்பட்ட பிடிஏ சைக்கிள் யாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைஃபை என்ற இடத்தில் முடிவுக்கு வந்தது. 


சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், இந்த 2024 தேர்தல் முக்கியமானது. 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், 2027-ல் மாநிலத்தில் பாஜக விலகுவது உறுதி. இவ்வாறான நிலையில் அனைவரும் 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், 2024ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு தொடங்கும் எனவும் அவர் கூறினார். தற்போது பா.ஜ.க ஆட்சியில் ஊழல் மிகுந்த அரசாக உள்ளது.


மேலும் படிக்க - “பிரதமர் மோடி என்றால் பநோத்தி” -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!


உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், பல ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும் என்று கூறுவேன். பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா மைதானத்தில் போட்டி நடத்தி இருந்தால், விஷ்ணுவின் அருள் கிடைத்திருக்கும் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்றார். மேலும் அங்குள்ள ஆடுகளம் மிகவும் மோசமாக இருப்பதாக் கூறினார்.



பிடிஏ யாத்திரையில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்தார். முதலில் எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை காப்பாற்றவும் யாத்திரை தொடங்கப்பட்டது வெற்றிக்கரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். நாளை நேதாஜியை நினைவு கூர்வோம், அவரது பிறந்த நாளை கொண்டாடுவோம், நேதாஜி தன் வாழ்நாள் முழுவதும் சோசலிசத்துக்காகப் போராடியவர்.


மேலும் படிக்க - தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்; காங்கிரசுக்கு திமுக ஆதரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ