வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம்  7ம் தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரித் துறையில் (Income Tax Department) மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய முன்னதாக  www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்தது.  தற்போது புதிய இனையதளமான incometax.gov.in (www.incometax.gov.in) ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய இணைய தளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியுள்ளது. 


புதிய இணைய தளத்தில் ஐடிஆர் -1, ஐடிஆர் -2 ( ITR-1, ITR-2 )மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை, உருவாக்குவதற்கான மென்பொருள் (software) இலவசமாக வழங்கப்படும் என வருமான வரித் துறை கூறியுள்ளது. 


ALSO READ | மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!


இதற்கு முன்னர் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “  வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், ஐடிஆர் 1, 4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் ஐடிஆர் 2 (ஆஃப்லைன்) ஆகியவற்றுக்கான ஐடிஆர் தயாரிப்பு மென்பொருள் இலவசமாக கிடைக்கும்” என்றும், ஐடிஆர் 3, 5, 6, 7 ஐ தயாரிப்பதற்கான வசதி விரைவில் கிடைக்கும். ” என்றும் கூறப்பட்டிருந்தது.


வருமான வரி தாக்கலுக்கான புதிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்


வரி செலுத்துவோர் விரைவாக பணத்தைத் திரும்பப் பெற உடனடியாக செயல்படுத்துதல்


வரி செலுத்துவோரின்  கோரிக்கைகள், புகார்கள் நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றின் விபரங்களை காண்பிப்பதற்கான ஒற்றை டாஷ்போர்டு.


புதிய இணையதளத்தில் புதிய வருமான வரி படிவங்கள், தொழில்முறை வரி படிவங்கள், வருமான வரித்துறையினர் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு ஆன்லைனிலேயே பதில் தரும் வசதி, அதற்கு மேல்முறையீடு செய்யும் வசதி போன்றவை உள்ளன.


வரி செலுத்துவோர், வருமான வரி தாக்கலுக்கான தங்கள் சுயவிவரத்தை புதுப்பித்து சம்பளம், வீட்டுச் சொத்து, வணிகம் / தொழில் உள்ளிட்ட வருமான விவரங்களை முன் கூட்டியே பதியலாம்


வரி செலுத்துவோர் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காக வரி செலுத்துவோர் உதவிக்கான புதிய அழைப்பு மையம்.


விரிவான கேள்விகள், பயனர் கையேடுகள், வீடியோக்கள் மற்றும் chatbot / நேரடி முகவர் சேவை ஆகியவை வழங்கப்படுகின்றன;


வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், வரி நிபுணர்கள் தகவல்களை சேர்ப்பது, Faceless Scrutiny  அல்லது முறையீடுகளுக்கான அம்சங்கள் இருக்கும்.


வரி செலுத்துவோர் புதிய இணையதளத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிபிடிடி தெரிவித்துள்ளது. 


ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR