நிதி பற்றாகுறை காரணமாக தேசிய அளவில் செயல்படும் வானொலி மையம் உள்ளிட்ட 5 பிராந்திய மொழிகளின் வானொலி ஒலிபரப்பு சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்திய வானொலி சேவையான அகில இந்திய வானொலி, தற்போது நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தனியார் வானொலி நிலையங்களின் வரவால், அரசின் வானொலி சேவைக்கான நேயர்கள் எண்ணிக்கை பொருமளவு குறைந்துள்ளது.


இதன் காரணமாகவும், செலவினத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்,  குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட நிலையங்களின் சேவை நிறுத்தப்படும் பட்சத்தில், இந்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த முழு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.