நியூடெல்லி: ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று வானிலை முன்னறிவிப்பு குறித்த வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அறிக்கையின்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வட பகுதிகளில் பருவமழை அதிகமாக இருக்கலாம் என்றும், பல மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை வரை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில தசாப்தங்களுக்கு முன்பு இன்று போல் அதிக மாசு இல்லாத போது. காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் பக்க விளைவுகள் குறைவாக இருந்தன, பின்னர் வானிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழத்தொடங்கின. இருப்பினும், 2020 முதல், வானிலை கணிக்க முடியாத அளவுக்கு மாறியிருப்பதை கண்டு வானிலை விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள்.


இமாச்சல பிரதேசத்தில் இயற்கை உருவாக்கும் பேரிடர் களியாட்டத்தை வானிலை தாக்குதல் என்று கூறும் வானிலை நிபுணர்கள்,  தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு போலவே, இந்த முறையும் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை ஏமாற்றம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆகஸ்ட் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சிம்லாவுக்கு அருகில் மேகவெடிப்பு! கனமழைக்கு 7 பேர் பலி! மாநில அரசு எச்சரிக்கை


இமாச்சலப் பிரதேசத்திற்கு எச்சரிக்கை
 
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது, மலைப்பகுதிகள் அதிகம் இருக்கும் மாநிலத்தை அழித்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மிதமான முதல் கனமழை வரை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சோலன், சிம்லா, சிர்மௌர், மண்டி, குலு, உனா, பிலாஸ்பூர் மற்றும் காங்க்ரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஐஎம்டி விஞ்ஞானி சந்தீப் குமார் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 26 முதல் நிவாரணம் கிடைக்கும்
 
ஆகஸ்ட் 26 முதல் ஹிமாச்சலில் வானிலை மாறும். சமவெளி மாவட்டங்கள் மற்றும் மத்தியப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ஆகஸ்ட் 26 முதல் 30 வரை மழை நடவடிக்கைகள் குறையும்.


டெல்லியில் இன்று வானிலை இப்படித்தான் இருக்கும்


தலைநகர் டெல்லியில் மழை இல்லாத நிலையில், இன்று முதல் ஈரப்பதமான வெப்பம் முன்பு போல் மக்களை சிரமப்படுத்தும். வெள்ளிக்கிழமை, மேகங்களின் இயக்கம் நாள் முழுவதும் தொடரலாம். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரியாகவும் இருக்கலாம். இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 26 முதல் 30 வரை வானிலை முற்றிலும் வறண்டு இருக்கும்.


வானிலை கணிப்பு


ஆகஸ்ட் 25 முதல் 26 வரை மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசத்திலும், ஆகஸ்ட் 25-26 வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் தற்போதைய வானிலையே அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்.


(ஏஜென்சி உள்ளீடுகளுடன்)


மேலும் படிக்க | வானிலை முன்னறிவிப்பு... ‘இந்த’ மாநிலங்களில் மழை - வெள்ளத்தினால் பேரழிவு..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ