இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மலை மாநிலங்களில் இரண்டாம் சுற்று பருவ மழை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தலைநகர் சிம்லாவில் மழையினால் தொடர்ந்து பேரழிவு ஏற்பாடு வருகிறது. மழையினால் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. சிம்லாவின் லால்பானி பகுதியில் மரங்கள் விழுந்ததில் இறைச்சி கூடம் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமடைந்தன. மழை காரணமாக இந்த கட்டிடம் சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். வீட்டில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனுடன், சிம்லா உள்ளிட்ட மழை பெய்யும் பகுதிகளில் புதன்கிழமை அதாவது இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்
மறுபுறம், மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், இந்திய இராணுவம் மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அதன் பல பிரிவுகளை தரையிறக்கி உள்ளது. சிம்லா, ஃபதேபூர், இந்தோரா மற்றும் காங்க்ரா மாவட்டங்களில் இந்த ராணுவப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அதிகபட்ச மழை பாதிப்பு காணப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட இந்த சோகத்தால், அங்கு பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கன மழை எச்சரிக்கை
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளனர். டெஹ்ராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய இடங்களில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் உத்தரகாண்டின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறையைத் தவிர, NDRF மற்றும் SDRF படைகளின் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. சார்தாம் யாத்திரைக்கு வரும் மக்கள் வானிலை நிலையைப் பார்த்த பின்னரே மாநிலத்திற்கான பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மீண்டும் வெள்ளம்?
தலைநகர் டெல்லியில் மீண்டும் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. யமுனா மீண்டும் அபாய கட்டத்தை கடந்துள்ளதால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். மலைகளில் மழை பெய்து, ஹத்னிகுண்ட் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து, செவ்வாய்க் கிழமை இரவு 7 மணியளவில் யமுனையின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி 205.12 மீட்டரை எட்டியது. டெல்லியில் யமுனையின் நீர்மட்டம் 204.33 மீட்டராக உள்ளது.
தமிழகத்தின் வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய பரிசு... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ