ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடுத்த சில நாட்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான வானிலை மனதில் வைத்து அமர்நாத் யாத்திரையை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை ஒத்திவைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கனமழை பெய்தால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும். 


ஆனால் ஜம்மு-காஷ்மீரில் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் ஐந்து நான்கு நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தப்பட்டு உள்ளது. பால்தால் மற்றும் பஹல்காமில் பெய்த மழையால், யாத்திரீகர்கள் செல்லும் இரு பயண வழிகளில் வழுக்கும் தன்மை அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பயணம் ஆகஸ்ட் 4 வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 


ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தடை செய்யப்பட்டதால் அமர்நாத் யாத்திரை இன்றும் (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டது. இதுவரை, கடந்த 30 நாட்களில் சுமார் 3.30 லட்சம் யாத்ரீகர்கள் அமர்நாத் பயணம் செய்துள்ளனர். ஜூலை 1 முதல் பயணம் தொடங்கியதிலிருந்து 3,31,770 யாத்ரீகர்கள் புனித சிவலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரிய அதிகாரிகள் (எஸ்.ஏ.எஸ்.பி) தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 10,360 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.