இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் தற்போது, பதற்றம் நிலவுகிறது.  எல்லையில் பதற்றம் தீவிரமடைந்ததற்கான முக்கிய காரணம் லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சமபவம். இது குறித்து இப்போது அமெரிக்க செய்தித்தாள் நியூஸ் வீக் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் மூலம், ஜூன் 15 அன்று இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட  மோதலில் 60 சீன வீரர்கள் இறந்தனர் என அம்பலமாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வானில் (Galwan) சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் இந்த வன்முறை நடந்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. 


இந்த தோல்வியினால் சீனா கடும் கோபத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அது நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தோல்வியால் ஆத்திரத்தில் உள்ள அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவத்தில் தற்போது உள்ளவர்களை வெளியேற்றி தனக்கு விசுவாசமாக இருப்பவர்களை பெரிய பதவிகளில் அமர்த்த முடியும். இந்த தோல்வியினால்,  இந்தியாவுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதில் ஜி ஜின்பிங்கும் உற்சாகமாக உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எல்லையில் பதற்றம் அதிகரிக்கக்கூடும்.


2012 நவம்பரில் ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனதிலிருந்து, சீன துருப்புக்கள் இந்தியாவின் எல்லையில் ஆக்கிரமிப்பை அதிகரித்துள்ளன. ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்தியாவிற்கும்  சீனாவிற்கும் இடையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படவில்லை. சீன படையினர், ஊடுருவல் செய்ய இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


மேலும் படிக்க | அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது..!!!


ஜனநாயகங்களை பாதுகாப்பதற்கான அறக்கட்டளையை சேர்ந்த கிளியோ பாஸ்கலை மேற்கோள் காட்டி, நியூஸ் வீக் இந்த செய்தியை அம்பலப்படுத்தியுள்ளது, மே மாதத்திலேயே சீனாவின் வினோதமான நடவடிக்கைகள் குறித்து ரஷ்யா இந்தியாவிடம் கூறியது. சீனா ஏற்கனவே திபெத் பகுதியில் பயிற்சிகளை நடத்தி வந்தது என ரஷ்யா கூறியிருந்தது. அந்நிலையில் தான் ஜூன் 15 அன்று கால்வானில் இரு நாட்டு படையினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கு இடையே 45 ஆண்டுகளில் முதன் முதலாக நடந்த மோதல் சம்பவமாகும்


மேலும் படிக்க எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. கடும் குளிர் காலத்திற்கு தயாராகும் துருப்புகள்..!!!