பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை குறைத்தது ஆந்திரா அரசு!
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை குறைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!
அமராவதி: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை குறைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!
தொடர் உயர்வை கண்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை குறைக்கும் நடவடிக்கையாக ஆந்தார முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை குறைத்துள்ளது.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இந்த நடைமுறையினை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது
இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.5 குறைந்துள்ளது. அதேவேலையில் மராட்டிய மாநில அரசும் வாட்வரி குறைப்பு குறித்து கவனத்தில் கொள்வதாக தெரிவித்தது.
இந்நிலையில் தெலுங்குதேசம் ஆட்சிசெய்யும் ஆந்திர மாநிலத்தில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்க வாய்ப்புகள் எழுந்துள்ளது. நாளை முதல் இந்த விலைகுறைப்பு அமலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.