நடிகையாக அறிமுகம் ஆகி இன்று ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி வருபவர் தான் ரோஜா. தனக்கென தனி அங்கீகாரம் கிடைக்க அரசியலில் பல சோதனைகளை கண்டவர் இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு ஆளுமையாக வளர்ந்துள்ளார். எவ்வளவு ஆபாச கமெண்டுகள் இவர் மீது வீசப்பட்டாலும், அதற்கெல்லாம் அஞ்சாமல் துணிந்து நின்று அரசியலில் ஜொலித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு எதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்வார். கடந்த ஆண்டு ஒரு பெண்ணை எம்பிபிஎஸ் படிக்க வைக்க உதவினார். அவரது சொந்த தொகுதியான நகரியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த வரிசையில் தான் இன்று அவர் செய்த செயல் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.



ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் சாலை ஓரத்தில் செருப்பு விற்கும் கடை வைத்திருக்கிறார். இவருக்கு இரண்டு கால்களும் இல்லை. திருமணம் ஆன இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி Kejiyaவோ ஒரு சிறுநீரகம் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருக்கிறார். இந்த குடும்பம் தங்கள் வாழ்க்கையில் ஒரு மேஜிக் நடக்காத என்ற ஏக்கத்தோடு இருந்துள்ளனர். அரசின் பென்ஷனான 3 ஆயிரம் ரூபாய் தான் இவர்களுக்கென்று வரும் நிரந்தர வருமானம். இதில் இரண்டு பெண் பிள்ளைகளை படிக்க வைக்க படாத பாடு பட்டு வந்துள்ளார் நாகராஜ். 


மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி? 2வது வழக்காக இன்று தீர்ப்பு!


இந்த சூழலில் செய்தி ஒன்றில் நாகராஜ் குடும்பத்தின் அவல நிலை குறித்து செய்தி வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை குறிப்பிட்டு ஒருவர் எக்ஸ் தளத்தில் அமைச்சர் ரோஜாவிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு எங்கள் டீம் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று மெசேஜ் செய்தார் ரோஜா. அதன் தொடர்ச்சியாக இன்று சாண்டா கிளாஸ் வேடமனிந்து விஜயவாடா வாம்பே காலனியில் உள்ள நாகராஜுன் வீட்டுக்கு சப்ரைஸாக சென்றார். கிருஸ்துவரான நாகராஜ் தனது வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வந்ததை கண்டு நெகிழ்ந்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு உண்மையான ஷாக். சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். 



நாகராஜுன் குடும்பத்துடன் கேக் வெட்டி கிருஸ்துமஸ் கொண்டாடிய ரோஜா, அவரின் பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக 2 லட்சம் ரூபாய் காசோலையையும் வழங்கினார். ரோஜாவின் சப்ரைஸ் விசிட் ஒட்டு மொத்த குடும்பத்தின் முகத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. 


ரோஜா தனது வீட்டுக்கு வந்து சென்றது குறித்து பேசிய நாகராஜ், எப்போது வேண்டுமானாலும் நானும் என் மனைவியும் மரணிப்போம் என்ற நிலையில் தான் எங்கள் உடல்நிலை உள்ளது. எனக்கும் கிட்னி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்று மேரி மாதாவே வீட்டுக்கு வந்தது போல ரோஜா வந்தார். என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். 



ரோஜாவின் அப்பா பெயர் நாகராஜ். அவர் தற்போது உயிரோடு இல்லை. இதனால் இந்த நாகராஜுன் கஷ்டம் அறிந்த ரோஜா நேராக சென்று உதவி நெகிழ்ந்துள்ளார். அமைச்சர் ரோஜா பொதுவாக பிறருக்கு உதவுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வரிசையில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கே சென்று அவரது குடும்பத்துடன் கேக் வெட்டி அவர்களுக்கு உத்வேகத்தை அளித்த ரோஜாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ