ஆந்திரா மாநிலத்துக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்தது. இதையடுத்து, இவ்விரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றம் ஐதராபாத்தில் உள்ளது. உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் ஐதராபாத்தில் தான் இருந்தது. பின்னர், மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக ஆந்திர மாநிலத்தில் உருவாக்கப்பட்டது. அமராவதி ஆந்திராவுக்கான தலைநகரானது. மாநிலங்கள் பிரிந்ததை போலவை ஐதரபாத்தில் உள்ள உயர்நீதிமன்றமும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இருதரப்பினரும் முன் வைத்தனர்.


இந்நிலையில் ஆந்திராவுக்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு அனுமதி அளித்தது. இதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. 


ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு 16 நீதிபதிகளும், தெலுங்கானாவுக்கான உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளும் இருப்பார்கள். இதனையடுத்து, அடுத்த நான்கு நாட்களுக்கு புதிய உயர்நீதிமன்றத்திற்கான கட்டடத்தை ஆந்திர அரசு தயார் செய்ய வேண்டும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுருத்தியிருந்தது.


இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் தனி உயர்நீதிமன்றம் அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். வருகிற 1 ஆம் தேதி முதல் அமராவதியில் நாட்டின் 25-வது உயர்நீதிமன்றமாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.