திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Onion Bomb Blast Latest News Updates: தீபாவளி சீசனில் வெடிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சிறிய தீ விபத்துகள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படுவதை பார்த்திருப்போம். சில இடங்களில் துரதிருஷ்டவசமாக பெரிய விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒவ்வொரு தீபாவளிக்கும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, அரசு தரப்பிலும், தன்னார்வ அமைப்புகளின் தரப்பிலும் தீபாவளியை தீ விபத்து இன்றி பாதுகாப்பாக கொண்டாட தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், சிலரோ பாதுகாப்பற்ற வெடிபொருள்களை பயன்படுத்துவதாலும் பெரிய விபத்துகள் ஏற்படும். சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற வகையில் வெடிகளை தயாரிப்பது, தடை செய்யப்பட்ட வெடி பொருள்களை கையாள்வது ஆகியவை உயிர் சேதத்திற்கும் வழி வகுக்கும் எனலாம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை (அக். 31) கொண்டாடப்பட்ட நிலையில், ஆந்திராவில் வெடிவிபத்தில் ஒரு உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடித்த வெங்காய வெடி
ஆந்திர பிரதேசத்தின் (Andhra Pradesh) எலுரு மாவட்டத்தில் வெங்காய குண்டு இரண்டு பேர் சேர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வைத்து கொண்டுசென்றபோது இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. தீபாவளி கொண்டாட்டத்திற்காக அவர்கள் கொண்டு சென்றபோது இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில், அவர்கள் கொண்ட சென்ற வெடியில் வெங்காய குண்டு இருந்தது என்றும் மற்ற வெடிகள் கீழே விழுந்த பின்னர் விழத்தொடங்கியது என்றும் கூறினார்.
அங்கு கோயில் அருகே சாலையில் இருந்த குழி ஒன்றில் பைக் வேகமாக இறங்கியதால் அந்த குண்டுகள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் IED குண்டுகளை போன்று இந்த வெங்காய குண்டுகள் செயல்படும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவை பார்க்கும்போது, ஒரு குறுகிய சாலையில் நேற்று மதியம் 12.17 மணியளவில் ஸ்கூட்டியில் இருவர் செல்கின்றனர். குறுகலான சாலையின் முடிவில் ஒரு ஜங்ஷன் வருகிறது, அதன்பின்னர் அந்த சாலை சற்று அகலமைடைகிறது. அந்த ஜங்ஷனில்தான் 5-6 பேர் அடங்கிய குழு ஒன்று நின்றுகொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.