தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழு நீச்சல்: ஆந்திர மாணவர்கள் சாதனை
Swimming Record: ஆந்திராவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
இந்த நீச்சல் வீரர்கள், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் நேற்று இரவு இலங்கை தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து இன்று காலை தனுஷ்கோடி வரை நீந்தி வந்து சாதனை படைத்தனர்.
மேலும் படிக்க | 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை! பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த ஜியா ராய்
சாத்விக்(15), அலங்குருதிக் (13) ஜார்ஜ் (15), ஜான்சன் (12), பேபிஸ் வந்தனா (17), பிரான்ஸ் ராகுல் (18) ஆகிய ஆறு பள்ளி மாணவ மாணவிகள் (4 மாணவர்கள், 2 மாணவிகள்) இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி அன்று இரவு நீந்த தயாராகினர். காலநிலை மாற்றத்தால் இவர்கள் நீந்துவதற்கு அனுமதி கிடைக்காததால் நேற்று இரவு காலநிலை சரியான பின் நீந்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு 1 மணிக்கு இலங்கையில் தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து 9 மணிநேரம் 27 நிமிடங்கள் வரை நீந்தி இன்று காலை 10:30 மணிக்கு தனுஷ்கோடி வந்தனர்.
இதுவரையிலும் நீந்தியவர்கள் தனித்தனியாகவே நீச்சலில் சாதனை படைத்துள்ளனர். குழுவாக சேர்ந்து மாணவர்கள் நீந்தி சாதனை படைத்தது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் நீந்தி சாதனை படைத்துள்ளனர். எனினும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நீந்திச்சென்று சாதனை படைத்துள்ளது இதுவே முதன்முறையாகும்.
மேலும் படிக்க | நெல்லையில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து - என்ன நடந்தது ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR