இலங்கை நெருக்கடி: பதவி விலகுகிறாரா இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச?

Sri Lanka Crisis: இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2022, 11:45 AM IST
  • அதிகரிக்கும் இலங்கை நெருக்கடி.
  • இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது.
  • பதவி விலகுகிறாரா இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச?
இலங்கை நெருக்கடி: பதவி விலகுகிறாரா இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச? title=

இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருப்பதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைக்க கூடிய கோரிக்கைகள் தொடர்பிலே பிரதமர் அவதானம் செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படி பதவி விலகுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்த போதும் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ர உறுப்பினர்கள் இந்த நேரத்திலே பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | இலங்கையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...ஒருவர் பலி

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. கலவரங்களும் போராட்டங்களும் தினசரி நிகழ்வாகிவிட்டன. விலைவாசி விண்ணை தொட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 19 அன்று கேகாலை மாவட்டம் ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி - கொழும்பு ரயில் பாதையை போராட்டக்காரர்கள் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலையிலிருந்து சுமார் 15 மணி நேரம் வரை இந்த போராட்டம் நீடித்தது.

போராட்டம் தொடர்ந்து நீடித்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க முடிவு செய்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீச தொடங்கினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க முயற்சி செய்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றுக்கும் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையில் வலுக்கும் போராட்டம்: பிரதான சாலைகள், ரயில் தடங்களில் மக்கள் கூட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News