டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் நடிகர் ஆர். மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளியும், சாஜன் பிரகாஷ் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
10 பேர் கலந்துக் கொண்ட டென்மார்க் ஓபன் நீச்சல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் வேதாந்த் மாதவன். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் பிரகாஷ் தங்கம் வென்றார். வேதாந்தும் சாஜனும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பதக்கம் வென்ற நீச்சல் வீரர்கள் இருவரின் வெற்றியை மாதவன் டிவிட்டரில் பகிர்ந்துக் கொண்டார்...
With all your blessings & Gods grace @swim_sajan and @VedaantMadhavan won gold and silver respectively for India, at The Danish open in Copenhagen. Thank you sooo much Coach Pradeep sir, SFI and ANSA.We are so Proud pic.twitter.com/MXGyrmUFsW
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 16, 2022
கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபனில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் கருணையுடனும் @swim_sajan மற்றும் @VedaantMadhavan முறையே இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். மிக்க நன்றி பயிற்சியாளர் பிரதீப் சார், SFI மற்றும் ANSA. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் துறையில் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில வேதாந்த் மாதவன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
“இந்த மாதம் எங்களுக்கு சில போட்டிகள் உள்ளன. இது (Denmark Open) ஒரு தயாரிப்பு போட்டி, நாங்கள் மெதுவாக காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நோக்கிச் செல்ல முயற்சிப்போம், ”என்று இரண்டு முறை ஒலிம்பியனான பிரகாஷ் பிடிஐயிடம் தெரிவித்தார்.
மார்ச் 2021 இல் லாட்வியா ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்ற 16 வயதான அவர், கடந்த ஆண்டு ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பிலும் கலந்துக் கொண்டார்.
நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என ஏழு பதக்கங்களைப் பெற்றார். சக்தி பாலகிருஷ்ணன் 'பி' இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தையும், பெண்களுக்கான 400 மீட்டர் மெட்லேயில் 5:10:71 நேரத்துடன் ஒட்டுமொத்தமாக எட்டு இடத்தையும் பிடித்தார்.
இந்த சந்திப்பில் நான்காவது இந்திய நீச்சல் வீரரான தனிஷ் ஜார்ஜ் மேத்யூ 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸில் 24:29 என்ற நேரத்துடன் 29வது இடத்தைப் பிடித்தார்.
மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR