கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக 100 கோடி ரூபாய் செக்கை செலுத்தியிருக்கிறார். இந்த் செக்கை பார்த்த அர்ச்சகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். அர்ச்சகர்களை அதிர வைத்த அந்த சம்பவம் என்ன? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தினமும் பலர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியலில் விழும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். 


மேலும் படிக்க | சந்திரயான் 3 விண்கலத்தை வைத்து காண்டம் விளம்பரம்..! அதிர்ச்சியில் மக்கள்..!


எப்போதும் போல நேற்று முன்தினமும் கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் கைகளில் அந்த செக் சிக்கியுள்ளது. ஒரு பக்தர், காணிக்கையாக 100 கோடி ரூபாய் காசோலையை கோயில் உண்டியலில் போட்டுள்ளார். அந்த காசோலையில் வாராஹ லக்‌ஷ்மி நரசிம்மதேவஸ்தானத்தின் பெயரையும் எழுதியுள்ளார். 


அடித்தல் திருத்தல்..


பக்தரின் அந்த காசோலையில் முதல் 10 ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. பின்பு அதை அடித்து அவர் 100 கோடி ரூபாய் என்று எழுதியுள்ளார்.  இதை பார்த்த கோயில் அதிகாரிகள், குழப்பமும் அதனுடன் ஆர்வமும் ஏற்பட்டது. இதயடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 


அதிர்ச்சி கொடுத்த பக்தர்..


100 கோடி ரூபாய் காசோலை குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த காசோலை ராதாகிருஷ்ணன் என்பவரின் பெயரில் இருந்தது தெரிய வந்தது. மேலும், இவர் பெத்த பள்ளியை சேர்ந்தவர் என்பதையும், இவர் குறித்த இதர விவரங்களையும் அதிகாரிகள் அறிந்து கொண்டனர். 100 கோடி ரூபாய் காசோலை கொடுத்த ராதாகிருஷ்ணாவின் கணக்கில் ரூ.17 மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து சாமிக்கே அல்வா கொடுக்கப்பார்த்த ஆசாமியை கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க | சந்திரயான்-3: நிலவின் தடம் பதிக்கும் முன்... விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ