கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாம் செய்தித்தாள்களில் மோசடி தொடர்பான செய்திகளைப் படிக்கிறோம். இன்றைய காலகட்டத்தில், போலி காசோலைகளைத் (Fake Cheque) தயாரிப்பதும், மற்றவரின் அகௌண்டில் இருக்கும் பணத்தை எடுக்க மோசடி வேலைகளில் ஈடுபடுவதும் மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. இப்படி செய்து, மோசடி செய்பவர்கள், பல ஆண்டுகள் கடினமாக உழைத்து பலர் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தை நொடியில் திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை மிகவும் பாதுகாப்பானதாக்க, 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து காசோலைகளுக்கும் 'Positive Pay’ என்ற ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி (Reserve Bank) முடிவு செய்துள்ளது. அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே 20 சதவீதம் மற்றும் 80 சதவீத காசோலைகள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் கீழ் வரும்.
RBI-ன் பணவியல் கொள்கைக் குழுவின் (MPC) மறுஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்த பின்னர், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், “காசோலை செலுத்துதல்களை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து காசோலைகளுக்கும் ‘Positive Pay’ வழிமுறை செயல்படுத்தப்படும்.” என்று கூறினார்.
‘Positive Pay’ என்றால் என்ன?
இது மோசடியைக் கண்டறியும் ஒரு வகை அம்சமாகும். இதன் கீழ், காசோலை பணமாக மாற்றப்படுவதற்கு முன்னர், அதாவது encash செய்யப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படும். காசோலையை வழங்கிய நபர் வங்கியின் மொபைல் செயலியில், வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். தரவுகளில் எதாவது பொருத்தம் இல்லை என்றால், காசோலை வழங்கும் நபரை வங்கி தொடர்பு கொள்கிறது.
ALSO READ: இனி இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலாம்..!
இந்த வழிமுறை எவ்வாறு செயல்படுகிறது
தனியார் வங்கியான ICICI வங்கி இந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறது. ICICI வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, காசோலையை பயனாளிக்கு வழங்குவதற்கு முன், வங்கியின் மொபைல் செயலியில், நீங்கள், காசோலை எண், காசோலை தேதி, பணம் செலுத்துபவரின் பெயர், கணக்கு எண், தொகை போன்ற தகவல்களையும், காசோலையின் முன் மற்றும் பின் பக்கத்தின் புகைப்படங்களையும் பகிர வேண்டும். இதற்குப் பிறகு, பணம் செலுத்துபவர் காசோலையை டெபாசிட் செய்யும் போது, Positive Pay மூலம், காசோலை மற்றும் வழங்கியவர்
கொடுத்த தகவல் தொடர்பான விவரங்கள் Cross verify, அதாவது சரி பார்க்கப்படும். காசோலை அளித்த நபர் வழங்கியுள்ள விவரங்களும் காசோலையின் விவரங்களும் ஒத்துப்போனால் மட்டுமே பயனாளிக்கு அந்தத் தொகை அளிக்கப்படுகிறது. விவரங்கள் பொருந்தவில்லை என்றால், காசோலை வழங்கிய நபர் தொடர்பு கொள்ளப்படுவார்.
இந்த வகையில் காசோலைகளின் மூலம் நடக்கும் மோசடிகளை வெகுவாக குறைக்க முடியும்.
ALSO READ: வீடு & கார் கடன் வாங்குவதற்கான சிறந்த வங்கிகள் எது?.. நமக்கு என்ன நன்மை!!