கவுண்டவுன் ஸ்டார்ட்! ஆம் ஆத்மிக்கு சிக்கல் மேல் சிக்கல்... கட்சியில் இருந்து விலகிய ராஜ் குமார் ஆனந்த்
Raaj Kumar Anand Resigns: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சி `ஊழல்` ஆகிவிட்டதாகவும், தலித் மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்குமார் ஆனந்த்.
Aam Aadmi Party, Delhi: டெல்லியில் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சனைகள் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தற்போது டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் (வயது 57) தனது பதவியையும், கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். ராஜ் குமார் ஆனந்த் டெல்லி அரசின் சமூக நலத்துறை அமைச்சகத்தை கவனித்து வந்தார். ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா செய்தது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது.
பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஆனந்த்
மத்திய டெல்லியில் உள்ள படேல் நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார் ஆனந்த், "இன்று மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், அரசியல் மாறினால் நாடு மாறும் என்றும் கூறினார். ஆம் ஆத்மி கட்சி மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஊழல் புதைகுழியில் சிக்கியுள்ளது. ஊழல்வாதிகளுடன் என்னால் பணியாற்ற முடியாது.
இதனால் தான் நான் இந்த கட்சி, ஆட்சி மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இன்று நான் எதுவாக இருந்தாலும் அதற்கு டாக்டர் அம்பேத்கர் தான் காரணம். நான் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் ஆனதே தலித் சமுதாயத்துக்கு நல்லது செய்யத்தான். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பதவிகளில் தலித் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலித் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அல்லது கவுன்சிலர்களுக்கு எந்த மரியாதையும் கட்சியில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நான் சிக்கிக்கொண்டதாக உணர்கிறேன். நேற்று, டெல்லி உயர்நீதிமன்றம் தவறு நடந்துள்ளது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. எனவே ஏதோ தவறு உள்ளது என்றார். தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை தடுத்து நிறுத்தும் கட்சியில் தான் நீடிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
மேலும் படிக்க - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு.. “கைது செய்தது சரி தான்” டெல்லி உயர் நீதிமன்றம்
சஞ்சய் சிங்கின் வீடியோ பகிர்ந்த ராஜ்குமார் ஆனந்த்
தலித்துகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது என ராஜினாமா அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ராஜ்குமார் ஆனந்த் தனது சமூக ஊடக தளமான X இல் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீடியோவை வெளியிட்டார். அதில் சஞ்சய் சிங் திகார் சிறை நிர்வாகம் மத்திய அரசின் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாக குற்றம் சாட்டி பேசுகிறார். இது தவிர, முதல்வர் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை அவர் இன்னும் தனது சுயவிவரத்தில் வைத்துள்ளார்.
ED ரெய்டு செய்தது
சமீபத்தில் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் சுமார் 23 மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத் துறை. ஆனால் அந்த சோதனை மதுபான ஊழல் தொடர்பாக இல்லை என்று கூறப்படுகிறது. ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் எந்த வழக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில், சுமார் 7 கோடி ரூபாய் சுங்க வரியை ஏய்ப்பு செய்து சரக்குகளை இறக்குமதி செய்ததாக பொய்யான அறிவிப்புகள் வந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அமலாக்க இயக்குனரகம் (ED) அவரது வீட்டில் சோதனை நடத்தியது எனக் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ