கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அந்த முயற்சிகளில் ஒன்றாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் DRDO (Defence Research and Development Organisation), கோவிட் நோயாளிகளுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்தது. இதற்கு 2-Deoxy-d-glucose (2-DG) என்றும் பெயரிடப்பட்டது. இது தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவத்தில் உள்ள மருந்தாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மருந்தை DRDO, டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் (Dr Reddy's Laboratories) இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த கோவிட் எதிர்ப்பு மருந்து, மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகள், ஆக்சிஜனை சார்ந்திருப்பதை குறைக்கும். இந்த மருந்தை வாய்வழியாக கொடுக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.


இந்த மருந்தை எப்படி, எவ்வாறு, எப்போது பயன்படுத்துவது என்ற வழிகாட்டு நெறிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) செவ்வாயன்று (ஜூன் 1, 2021) வெளியிட்டது. 
ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் (Dr Reddy's Laboratories (DRL)) இணைந்து டி.ஆர்.டி.ஓவின் முன்னணி ஆய்வகமான Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.


Also Read | Corona Vaccine: தமிழகம் வரும் 4.20 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசிகள்


2-டிஜி மருந்தை மருத்துவரின் மேற்பார்வையில் பயன்படுத்த வேண்டும் என்று டிஆர்டிஓ கூறியது. அவசரகால பயன்பாட்டிற்கான வாய்வழி மருந்தாக பயன்படுத்தப்படும் 2-டிஜி, தீவிரமாக கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு துணை சிகிச்சை முறையாகும். தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவத்தில் 2டிஜி கிடைக்கிறது. இது ஆக்ஸிஜனை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.



மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த மருந்து பயன்படுத்தப்பட வேண்டும். மிதமான கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் 2-டிஜி மருந்தை பரிந்துரைக்கலாம். அதிகபட்சமாக 10 நாட்கள் வரை மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்தவேண்டும்.


இந்த மருந்தை பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் 2DG@drreddys.com இணையதளத்தில் பதிவு செய்து மருந்தை பெற்றுக் கொள்ளலாம்.  


ALSO READ |  Corona Mela in Chennai: தடுப்பூசி போடுங்க! தங்கம், பைக் எல்லாமே இலவசம்! வாங்க, அள்ளிட்டு போங்க


கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு 2டிஜி மருந்து கொடுத்து பரிசோதிக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே இந்த வகை நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை பரிந்துரை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு 2டிஜி மருந்தைக் கொடுக்கக் கூடாது என்றும் DRDO விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட் -19 எதிர்ப்பு மருந்தின் முதல் தொகுதியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மே 17ஆம் தேதியன்று வெளியிட்டனர்.  


2 டிஜி ஆன்டி கோவிட் 19 மருந்தின் விலை என்ன தெரியுமா? ஒரு பாக்கெட் 990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் 2 டிஜி மருந்து வழங்கப்படும். ஜூன் மாத மத்தியில் இந்த மருந்து வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என்று டாக்டர் ரெட்டி லெபாரட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ALSO READ |  விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR