Corona Vaccine: தமிழகம் வரும் 4.20 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசிகள்

4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில், இன்று தடுப்பூசி தமிழகம் (Vaccines for Tamil Nadu) வந்தடைந்தால், தடுப்பூசி போடும் பணி எந்தவித தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2021, 06:17 PM IST
  • தமிழகம் வரும் 4.20 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசிகள்
  • இன்று மாலை 5:20 மணிக்குள் சென்னை விமான நிலையத்திற்கு வரும்
  • தடுப்பூசி போடும் பணி எந்தவித தடையின்றி நடைபெறும்
Corona Vaccine: தமிழகம் வரும் 4.20 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசிகள் title=

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாதடுப்பூசி காலியாகிவிட்டதால், தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு (Covishield ) தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் வர இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் (Tamil Nadu Health Minister) மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இந்த சரக்கு விமானம் இன்று மாலை 5:20 மணிக்குள் சென்னை விமான நிலையத்திற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

முன்னதாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்,  செவ்வாய்க்கிழமை மாலை முதல் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தமிழ்நாட்டில் நிறுத்தப்படும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் (M. Subramanian) தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் சுமார் 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றில் 92 லட்சம் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாள் மாட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். மே மாத இறுதிக்குள் வரவிருந்த 1.75 லட்சம் அளவு தடுப்பூசியைஅனுப்புவதில் மத்திய அரசு தரப்பில் இருந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ALSO READ |  Corona Mela in Chennai: தடுப்பூசி போடுங்க! தங்கம், பைக் எல்லாமே இலவசம்! வாங்க, அள்ளிட்டு போங்க

டெல்லியில் உள்ள திமுக பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இந்த மாதத்தில் சுமார் 42 லட்சம் தடுப்பூசிகள் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிற்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அந்த தடுப்பூசிகள் மக்கள் தொகை மற்றும் பிற தேவைகளின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்பப்படும் என்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் (L. Murugan) மற்றும் கோயம்புத்தூர் தெற்கு பாஜக எம்.எல்.ஏ வனதி சீனிவாசன் (MLA Vanathi Srinivasan) ஆகியோரும் தடுப்பூசி விசியத்தில் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும், தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

தமிழகத்திற்கு  இதுவரை 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இன்று தடுப்பூசி தமிழகம் (Vaccines for Tamil Nadu) வந்தடைந்தால், தடுப்பூசி போடும் பணி எந்தவித தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ALSO READ |  விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News