மோடியை வீழ்த்த காந்தி குடும்பத்தால் முடியாது -ஸ்மிரித்தி இராணி!
காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர் எவரும் வாராணாசி தொகிதியில் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி தெரிவித்துள்ளார்!
காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர் எவரும் வாராணாசி தொகிதியில் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி தெரிவித்துள்ளார்!
ZEE செய்திகள் தொலைகாட்சிக்கு சனி அன்று ஸ்மிரித்தி இராணி அளித்த ப்ரத்தியேக பேட்டியில் கூறியதாவது., "காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், வாராணாசி மக்களவை தொகுதியில் களமிறக்க காந்தியின் குடும்ப நபர்களை தயார் செய்து களமிறக்க காத்துள்ளனர். காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவரானாலும் சரி, இந்தியாவில் இருப்பவர்களோ அல்லது இத்தாலியில் இருப்பவர்களோ பிரதமர் மோடியை அவர்களால் வீழ்த்த முடியாது" என தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் இராணி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தொடரந்து பேசிய அவர், அமோதி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக சாடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியோ 2014 தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் மக்களை வஞ்சித்து விட்டு தற்போது கேரளாவின் வயநாட்டிற்கு ஓடிவிட்டார் எனவும் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கட்சி தொண்டர்களே கட்சி தலைவரை வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் தான் தலைவர் என்னும் தரத்தையும் ராகுல் காந்தி இழந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி வரும் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அமோதி மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். அமோதி தொகுதியில் இருந்து தான் தேர்தலை எதிர்கொள்வதில் தனக்கு எந்த பயமும் இல்லை எனவும், ராகுல் காந்திக்கே பயம் உண்டாகியுள்ளது எனவும் ஸ்மிரித்தி இராணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் இரண்டாவது தொகுதியை தேடி சென்றுள்ளார், ஆனால் நான் இதே தொகுதியில் தான் இருப்பேன் வெற்றி பெறுவேன் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.