புதுடெல்லி: கொரோனா காலத்தில் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பயணிகள் பயண நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரவேண்டும். இதைத் தவிர, பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே மாறிய விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.


விமானம் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமான நிலையத்தை அடைய வேண்டும், அதே நேரத்தில் சாமான்களை குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே கவுண்டரில் டெபாசிட் செய்ய வேண்டும். பேக்கேஜ் கவுண்டர் 60 நிமிடங்களுக்கு முன்பு மூடப்படும்.


  • அனைத்து பயணிகளும் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு web checkin அல்லது pre checkin செய்வது கட்டாயமாகும்.

  • பயணிகளின் தொலைபேசியில் ஆரோக்யா சேது செயலியை (Arogya Setu app) பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது கட்டாயமாகும். ஆரோக்கிய சேது நீங்கள் ஆரோக்கியமாய் இருப்பதாக பச்சைக் கொடி (green status) காட்டினால் மட்டுமே பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைய முடியும்.

  • உங்கள் தொலைபேசியில் ஆரோக்யா சேது செயலி இல்லை என்றால் நீங்கள் self health declaration அறிவிப்பை கொடுக்க வேண்டும். பயண விதிமுறைகளின் கீழ் பயணம் செய்ய ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று சுய அறிவிப்பு செய்ய வேண்டும்.

  • 7 கிலோவை விட குறைவான எடை கொண்ட hand baggage மட்டுமே பயணிகள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. checkin baggage சாமான்கள் 23 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.

  • உங்கள் சாமான்களில் 23 கிலோவுக்கு மேல் சாமான்கள் இருந்தால், அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.  முழு கட்டணமும் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும்.

  • போர்டிங் கேட் அருகே மீண்டும் உங்கள் வெப்பநிலை எடுக்கப்படும். உங்கள் உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக தெரிந்தால், விமானத்தில் செல்ல அனுமதி கிடையாது.  

  • ஏர் இந்தியாவின் போர்டிங் கேட்டின் அருகே, பயணிகளுக்கு பாதுகாப்பு கிட் கொடுப்பார்கள். அதில் உள்ள ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் சீல்ட் மற்றும் சானிட்டைசரை பயன்படுத்தி, உங்களுடைய ஆரோக்கியத்தையும், சக பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.  


Read Also | News Tidbits செப்டம்பர் 19: இன்றைய சில முக்கியமான செய்திகள்...


கொரோனா பாதிப்பு இருந்த ஒருவர் செப்டம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரிலிருந்து துபாய்க்கு விமானப் பயணம் மேற்கொண்டதாக துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் எஸ்.ஏ. போக்குவரத்து மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. எனவே துபாய் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலமாக பயணித்த இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.  இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த தடை அக்டோபர் 2 வரை தொடரும்.


பயணிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தது!


2020 செப்டம்பர் நான்காம் தேதியன்று, இந்த பயணி ஜெய்ப்பூரிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணிக்கு ஏற்கனவே கொரோனா பாஸிடிவ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, இதை விதிமீறல் என்று கூறும் துபாயின் சிவில் ஏவியேஷன் ஆணையம்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அனைத்து விமானங்களுக்கும் அக்டோபர் 2 வரை தடை விதித்துள்ளது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR