துப்பாக்கி முனையில் கணவன் கண் முன் மனைவி கூட்டுபலாத்காரம்..!
கணவர் கண்முன் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
கணவர் கண்முன் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
உத்தரபிரதேசம் மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவருக்கு முன்னால் ஆயுதமேந்திய கும்பலால் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார். சனிக்கிழமை தம்பதியினர் வீடு திரும்பும் வழியில் இ-ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பெண்ணை வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்களை அவரது கணவரைத் தடுக்க முயன்றபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்த அறிக்கையின்படி, 25 வயது இளம்பெண் ஒருவர், டாக்டரை பார்ப்பதற்காக தனது கணவருடன் பிஜ்னோருக்கு சென்று வீடு திரும்பும் போது 4 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது ரிக் ஷாவை வழி மறித்து கணவரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த கும்பலை தடுக்க முயன்ற அவரது கணவரை ஆயுதங்களால் தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து FIR பதிவு செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட உஸ்மான், இமாமுதீன், ரஷீத் மற்றும் ரியாசுப் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.