புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர், இப்போது இந்தியாவின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) கொண்டு வருவது குறித்த கேள்விக்கு, இந்த முடிவை அரசாங்கம் தான் எடுக்க வேண்டும் என்று இந்திய இராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கப்பட்டது. இப்போது அரசாங்கத்தின் அடுத்த இலக்கு PoK-ஐ இந்தியாவின் கீழ் கொண்டுவருவதாக இருக்கும் எனக் கூறியிருந்தார். 


மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அறிக்கை குறித்து ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத்திடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் கூறியது, "இது குறித்து அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கள் எந்த வகையான அறிவுறுத்தல்களை எங்களுக்கு வழங்குகிறதோ? அந்த வகையில், நாட்டில் உள்ள பிற படைகளும் நடவடிக்கை எடுக்கும். எப்போதும் இராணுவம் நடவடிக்கைக்கு தயாராக உள்ளது.


இராணுவத் தலைவர் மேலும் கூறுகையில், 'ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமைதியை மற்றும் மக்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மாநிலம் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன. இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் நடத்து என்பதை புரிந்து கொள்ளுவார்கள்.


1994ல் நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற அரசாங்கத்தில் POK குறித்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும் நினைவு கூர்ந்தார்.