தில்லியின் அடுத்த முதல்வர் யார்... ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு தகவல்!
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பியான சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பியான சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே கெஜ்ரிவால் கைது, ஒரு ஆழமான சதி திட்டத்தின் ஒரு பகுதி என்பதை சக தொண்டர்கள் மூலம் தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். டெல்லியின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தான் என்றென்றும் இருப்பார் என்பதை இன்று சொல்கிறேன் எனக் கூறினார்.அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை விட்டு விலகுவாரா என்றும், அவர் ராஜினாமா செய்தால் அவருக்குப் பதிலாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்பாரா என்றும் கேட்கப்பட்டதற்கு சஞ்சய் சிங் இவ்வாறு கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருக்க வேண்டும் என்று டெல்லி மக்கள் விரும்புவதாக ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை, அவருக்கும் அரசை நடத்துவதற்கான வசதிகள் கிடைக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
சிறையிலிருந்து ஆட்சி நடத்துவது எப்படி
டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, சிறையில் இருந்து ஆட்சியை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் பிஆர் அம்பேத்கர், துணைநிலை ஆளுநர் அல்ல. ஒரு முதல்வர் சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை என்றார்..
சதியில் சிக்கியுள்ள கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இணைந்து 456 சாட்சிகளை அளித்ததாகவும், ஆனால் இதில் 4 இடங்களில் மட்டுமே கெஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் சிங் கூறினார். இந்த வழக்கில், மகுந்தா ரெட்டி, ராகவ் மகுந்தா, சரத் ரெட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட நிலையில், விசாரணையில் கெஜ்ரிவாலின் பெயரை மகுந்தா ரெட்டி கூறாததால், அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார் என்றார். அதன்பிறகு தான் ராகவ் கெஜ்ரிவாலின் பெயரை குறிப்பிட்டார் என்றும், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்றார்.
சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை
கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவில் இருந்து இதையெல்லாம் எங்கள் வழக்கறிஞர்கள் பெற்றுள்ளனர். ஷரத் ரெட்டியின் 12 அறிக்கைகளில், கடைசி அறிக்கையில் மட்டுமே கெஜ்ரிவாலின் பெயர் உள்ளது. இந்த வழக்கில் மனிஷ் சிசோடியாவின் மனைவி 20 ஆண்டுகளாக கடுமையான நோயால் அவதிப்பட்டு வருகிறார், ஆனால் மனீஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றார்.
பாஜக ஒரு ஊழல் கட்சி
மதுபான ஊழலை பாஜகவினர் செய்துள்ளனர் என்றும், துணைநிலை ஆளுநருக்கு தார்மீக மனப்பான்மை இருந்தால், பாஜகவுக்கு எதிராக விசாரணை நடத்தி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் சஞ்சய் சிங் கூறினார். பாஜகவினர் ஊழலைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள். அவர்கள் தொழிலதிபர்களின் 15 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். உலகில் ஊழல் மிகுந்த கட்சி பாஜக. பாஜக பொய் வழக்குகளை பதிவு செய்து, பொய் சாட்சிகளை அளித்த நிலையில், அதன் அடிப்படையில் கெஜ்ரிவால் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சுனிதா கெஜ்ரிவால் அண்ணியை சந்திக்க சென்றேன். அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது, இந்த கண்ணீருக்கு தொண்டர்கள் பழிவாங்குவார்கள். 400 என்ன 600 என்று கூட சொல்லலாம். 400 சீட்க வரும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த முதல்வரையும் கைது செய்திருக்க மாட்டார்கள். யாருடைய கணக்கையும் முடக்கி இருக்க மாட்டார்கள். மோடி அவர்கள் தேர்தலில் தோற்பார். இப்போது மக்களின் முழக்கம் “மோடி-ஷாவுக்கு குட்பை, பணவீக்கத்துக்கு குட்பை, ஊழல்வாதிகளுக்கு குட்பை” என்ற நிலையில் உள்ளது என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ