வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா

பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் கேலி செய்து அசிங்கமாக பேசுகிறார் திமுக வேட்பாளர் நமக்கு அவர் தேவையா? ஐடி ரைட் வரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்களுக்கு ஏழை தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி கவலை இல்லை என்றார் நடிகை விந்தியா.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2024, 11:35 AM IST
  • திமுக விஷம் என்றால் பாஜக கெட்டுப்போன விஷம்: விந்தியா பேச்சு
  • திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட் பாஜக உருட்டில் ஸ்பெஷலிஸ்ட்: விந்தியா
வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா title=

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகையும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா திறந்த வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்களை போல் பிஜேபி நம்மை பிரித்து ஆள பார்க்கிறது. பாஜக விஷம் என்றால் திமுக கெட்டுப்போன விஷம் என்றார்.

பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் செய்து அசிங்கமாக பேசும் வேலூர் திமுக வேட்பாளர் நமக்கு தேவையா? நாங்க ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கொடுத்தோம் ஒரே மேக்கப்பா பேரன் லவ்லி போட்டிங்களா என இழிவாக பேசுகிறார். கதிர் ஆனந்தின் அப்பா துரைமுருகன் வேண்டுமானால் மேக்கப் போடுவதற்கும், லிப்ஸ்டிக் போடுவதற்கும், பென்சிலில் மீசை போடுவதற்கும் 10 ஆயிரத்தை பயன்படுத்தலாம். அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு நாக்கா வளிக்க முடியும்? ஐடி ரெய்டு வரும் அளவிற்கு கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர்கள். மணலில் எவ்வளவு கமிஷன் வருகிறது என்றால் கரெக்ட்டா சொல்லுவாங்க, கஞ்சா விற்றால் எவ்வளவு கமிஷன் வரும் என கேட்டால் கரெக்டா சொல்லுவாங்க, ஆனா ஏழைத் தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி இவர்களுக்கு கவலையில்லை.

துரைமுருகன், நேரு பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் தொடர்ந்து மக்களை இழிவாக பேசுகிறார்கள். தீய சக்தி திமுகவை இந்த தேர்தலோடு தூக்கிப் போட வேண்டும். திமுக எப்போதும் சுயநலத்திற்காக மட்டுமே ஜெயிப்பார்கள். ஒருவேளை திமுக இங்கு ஜெயித்தால் மந்திரி பதவிக்காக மோடியின் காலில் விழுந்து குஜராத்தின் கோமகனே, தமிழகத்தின் திருமகனே என போஸ்டர் ஓட்டுவார்கள். குரங்கை விட அதிகமாக தாவுபவர்கள் திமுக காரர்கள்.

மேலும் படிக்க | பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி - வானதி ஸ்ரீநிவாசன்!

திமுகவிற்கு பிஜேபியை பார்த்தாலும் பயம், மோதவும் அவர்களை எதிர்க்கவும் பயம். வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்ததே இந்த திமுக அரசு தான். திமுக ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுப்பார்கள் ஆனால் கேஸ் இருக்காது. பெட்ரோல், டீசலை குறைந்த விலையில் கொடுப்பதாக சொல்வார்கள் ஆனால் அது தரமாக இருக்காது. திமுக எப்போதும் தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியும் பின்பு ஒரு மாதிரியும் பேசுவார்கள்.

இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார் என விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்தியாவை காப்பது இருக்கட்டும் ஸ்டாலினை தூக்கவே நாலு பாடிகாட்ஸ் தேவைப்படுகிறார்கள். உள்ளூரில் ஓனான் பிடிக்க துப்பில்லாதவர்கள் டெல்லிக்கு போய் டைனோசர் பிடிப்பார்களாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிய செங்கல்லையே இன்றும் உதயநிதி தூக்கி வருகிறார். உதயநிதி செங்கல்லை தூக்கிக் கொண்டு திரிவதாலையோ, அவர் அமைச்சர் ஆனதாலையோ தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா?

திமுகவிற்கு ஓட்டு போடுவதும், குரங்கிற்கு கோட்டு போடுவதும் ஒன்றுதான். ஒரு பிரியோஜனமும் இல்லை. திமுகவிற்கும் பாஜகற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. திமுக பொய் சொல்லும், பாஜக பொய்யை பயங்கரமாக சொல்லும், திமுக என்றால் திராவிட நாடு என்பார்கள் பாஜக இந்திய மாடல் என்னும். திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட், பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட் இரண்டுமே நாட்டிற்கு ஆபத்தானவர்கள். அம்மாவை நம்புவது அதிமுகவை நம்புவதும் ஆண்டவனை நம்புவது போன்று என பேசினார்.

மேலும் படிக்க | நயினார் நாகேந்திரன் பணம் 4 கோடி ரூபாய் தாம்பரத்தில் சிக்கியது எப்படி? லீக்கான ரகசிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News