’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி

Nirmala Periyasamy criticizes minister Udayanidhi Stalin: ஓசூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவின் நிர்மலா பெரியசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் ஏக வசனத்துக்கு சர்ச்சையாக பேசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2024, 12:10 PM IST
  • நிர்மலா பெரியசாமியின் சர்ச்சைப் பேச்சு
  • அமைச்சர் உதயநிதியை ஒருமையில் விமர்சனம்
  • எடுபட்ட நாயே என கூட பேசுவேன் என திமிர் பேச்சு
’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி title=

நிர்மலா பெரியசாமி சர்ச்சை பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர பகுதிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக ஒருமையில் விமர்சித்தார். அமைச்சராக இருப்பதால் இந்தளவோடு நிறுத்திக் கொள்வதாகவும், இல்லையென்றால் இன்னும் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சு முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் உதயநிதியை ஒருமையில் விளாசல்

ஒசூரில் நிர்மலா பெரியசாமி பேசியதாவது: " இரண்டு பேர் வந்துள்ளார்கள் விளையாட்டு பசங்களா. எவ்வித பக்குவமோ, அறிவு முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கிறார்கள் ஒருவருக்கு டெல்லி பலம் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பை போல, அண்ணாமலை பேசி வருகிறார். அண்ணாமலைக்கு 3 ஆண்டுகளில் முதலமைச்சராகி விட வேண்டும் என்பது அவரின் எண்ணம். அவர் என்ன புரட்சி தலைவர் எம்ஜிஆரா?, எம்ஜிஆருக்கே முதல்வராக 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. அண்ணாமலை எங்க ஊர் பக்கத்து ஊர் காரர் தான், ஆனால் அவரைப்பற்றி கேள்விப்படுவது சற்றும் சரியில்லை.

மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா

இன்னொருவர் கலைஞரின் பேரன் ஆடவும் தெரியல,  பாடவும் தெரியல எதற்கும் துப்பில்லாத நீ, எதற்கும் தகுதியில்லாத நீ, யாருடா நீ எனவும் கேட்பேன் எடுபட்ட நாயே எனவும் கேட்பேன் பொதுவாழ்வில் இப்படி நான் யாரையும் பேசியது இல்லை. அமைச்சர் என்பதால் அமைதி காக்கிறேன். இனியும் வாய்க்கு வந்தது போல எடப்பாடி பழனிசாமி குறித்து தேவையில்லாமல் பேச வேண்டாம். பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அதிமுகவினர் வீதிக்கு வருவோம்" என்று பேசினார்.

நிர்மலா பெரியசாமிக்கு கண்டனம்

திமுகவினரை மற்ற கட்சிக்காரர்கள் எப்படி விமர்சித்தாலும், எதிர்கட்சி தலைவர்களை மாண்போடு பேச வேண்டும் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு அண்மையில் துரைமுருகன் மேடையிலேயே அறிவுறுத்தினார். இனியும் எந்த தலைவர்களையாவது ஒருமையில் விமர்சித்து பேசினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கண்டிப்பான கட்டுப்பாடு விதித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் பேசியிருக்கிறார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை கண்டித்தவர்கள், இப்போது நிர்மலா பெரியசாமியின் பேச்சையும் கண்டிப்பார்களா? அல்லது அதிமுக தான் அவர் மீது நவடிக்கை எடுக்குமா? என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி - வானதி ஸ்ரீநிவாசன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News