புது டெல்லி: மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் முதல் கடமை நோயுற்றவர்களுக்கு நிவாரணம் அளித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது தான். ஆனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் இப்போது நோயாளியின் முகவரி தான் முதலில் கேட்டக்கப்படும். டெல்லியில் வசிப்பவராக இருந்தால் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையென்றால் மருத்துவ சிகிச்சை கிடைக்காது. ஆம் இது உண்மைதான், டெல்லி அரசாங்கத்தின் (Delhi Govt) முடிவின்படி, டெல்லியில் வசிக்காதவர்கள், டெல்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விதிமுறை கொரோனா நெருக்கடி (Coronavirus) இருக்கும் வரை நீடிக்கும். டெல்லி மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (CM Arvind Kejriwal) இந்த முடிவை எடுத்துள்ளார்.


அதையடுத்து, ஏழு வழிகாட்டு நெறிமுறைகளையும் டெல்லி அரசு (AAP Govt) வெளியிட்டது. ஒருவர் டெல்லியில் வசிப்பவர் என்பதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். டெல்லி அரசு வழங்கிய அடையாள அட்டைகளின் பட்டியல் இவை. டெல்லி வாக்காளர் அட்டை, கிசான் அட்டை, தபால் அலுவலகத்தின் பாஸ்புக், நோயாளியின் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி தாக்கல் படிவம், பாஸ்போர்ட், நீர், மின்சாரம், தொலைபேசி, எரிவாயு இணைப்பின் சமீபத்திய பில், தபால் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நோயாளியின் வீட்டு முகவரி கொண்ட கடிதம் ஆகியவை மூலமாக டெல்லிவாசி என்று நிரூபிக்கவேண்டும். குழந்தை அல்லது மைனராக இருந்தால், பெற்றோரின் ஆவணங்கள் மற்றும் 2020 ஜூன் மாதம் எட்டாம் தேதிக்கு முந்தைய ஆதார் அட்டை (Aadhaar Card) தேவை.


READ | Coronavirus | தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணம் ரூ. 3,000 என நிர்ணயம்


இவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் மட்டுமே நீங்கள் டெல்லியின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, டெல்லிக்கு வெளியே வசிப்பவர்கள், டெல்லியின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி அரசின் (Kejriwal governmen) இந்த முடிவால், தலைநகர் மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் சிக்கல்கள் அதிகரிக்கப் போகின்றன.


இது குறித்து டெல்லி மருத்துவர் இவ்வாறு கூறுகிறார், "டெல்லி மருத்துவர்களைப் பொறுத்தவரை, இந்த முடிவு டெல்லி மருத்துவமனைகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும். டெல்லி அரசின் இந்த முடிவால் அனைவரும் பல பிரச்சனைகளை சந்திக்கப்போகிறார்கள். காசியாபாத் அல்லது சாஹிபாபாத்திலிருந்து ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஜிடிபி மருத்துவமனைக்கோ அல்லது அருகிலுள்ள டெல்லி அரசு மருத்துவமனைக்கோ அவசர நிலையில் வந்து சேர்ந்தால், மருத்துவ சிகிச்சையை கொடுப்பதற்கு முன் அவர் டெல்லியை சேர்ந்தவரா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.


முதலில் நோயாளியின் ஆதார் அட்டையைப் பார்ப்பார், டெல்லியைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை தங்கள் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.  அதுவும் ஒருவரின் நிலைமை சிக்கலாக இருக்கும்போது இதுபோன்ற கேள்விகளை கேட்பது எப்படி இருக்கும்? எந்தவொரு நோயாளியின் நிலைமையை முதலில் பரிசோதித்து அவசர சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான வசதி அங்கு இல்லையென்றால் பிற மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டும் என்று Clinical Establishment கூறுகிறது. 


சிகிச்சைக்கான வசதிகள் தான் ஒரு நோயாளிக்கு சிகிச்சை கொடுக்கலாமா அல்லது இன்னும் வசதிகள் அதிகமான மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும். ஆனால், இப்போது எமர்ஜென்சியில் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தால், அவர் முதலில் தான் டெல்லியில் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் சிகிச்சை அளிப்பதா இல்லையா வேறு மருத்துவமனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யவேண்டும். டெல்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மற்றும் அவசரகாலத்தில் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன் எனக் கூறினார் மருத்துவர்.


READ | ஜூன் இறுதிக்குள் டெல்லியில் 1 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகும்..!


ஆனால், எய்ம்ஸ், சப்தர்ஜங் மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளில் (Central Ggovernment Hospitalsi) இதுவரை இருந்ததைப் போலவே, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெற முடியும். வேறு சில இடங்களில் கிடைக்காத சிறப்பு அறுவை சிகிச்சைகள் செய்யும் டெல்லியின் சில தனியார் மருத்துவமனைகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் நோயாளிகளும் டெல்லிக்கு வரலாம், அதற்கு தடை விதிக்கப்படவில்லை.


மாநிலத்தில் வசிக்காதவர்களுக்கும், உறுப்பு மாற்று சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சை வசதிகள் டெல்லி மருத்துவமனைகளில் தொடரும். கூடுதலாக, சாலை விபத்துக்கள் மற்றும் ஆசிட் தாக்குதல்களால் காயமடைந்த டெல்லிக்கு வெளியே உள்ளவர்களுக்கும் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுக்க முடியும்.


இந்த விவகாரத்தில் அரசியல் சர்ச்சைகளும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. டெல்லி மாநில பாஜக பொறுப்பாளர் ஆதேஷ் குப்தா இந்த முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். லாக்டவுனுக்கு மத்தியில் ராஜ்காட்டில் பாஜக தொண்டர்களுடன் மறியல் செய்ய முயன்ற அவர், டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் சுகாதார சேவைகளின் நிலை சரிந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். எனவே இதுபோன்ற அபத்தமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் சாடினார்.


மேலும் பேசிய அவர் கெஜ்ரிவால் அரசு முற்றிலும் தோல்வியுற்றது. இன்று டெல்லி கடவுளையே நம்பியிருக்கிறது. நானும் கூட ராம் பரோசா... ராம் பரோசா (கடவுள் ராமர் தான் துணை) என்ற சொற்களைப் பயன்படுத்துகிறேன். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் இன்று படுக்கைகள் இல்லை. அதை மறைக்க கேஜ்ரிவால் இவ்வாறு நாடகம் ஆடுகிறார்: என்று ஆதேஷ் குப்தா கூறுகிறார்.


READ | சலூன் கடைகளை திறக்க அனுமதி; ஆனால் ஸ்பாக்களுக்கு அனுமதி இல்லை: கெஜ்ரிவால்


டெல்லி-என்.சி.ஆரில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. நாள்தோறும் நோயாளிகள் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லியின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவால் சிக்கல்கள் அதிகரிக்கப் போகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.